
காணும் கடவுள் முருகனுக்கு
காவடி தூக்கிய - உன்னை
கண்டதும் புகைப்படத்தில்
விரிந்ததே புன்னகை எம் விழியில்.
விளையாட்டுப் பிள்ளையவன்
விலக்கி வைப்பான் துன்பமெல்லாம்.
அவ்வைக்கும் அப்பனவன்
அன்புக்கு அடிமையாவான்.
விழி விரித்த நேரமெல்லாம்,
கரங்குவித்த பொழுதெல்லாம்,
ஓங்கார வடிவனவன்
ஒலிப்பானே குரலசைவில்.
''ஓம்" எனும் சொல்லிற்கு
சீராக பொருளுரைத்தான்,
உலகாளும் ஐயனுக்கே
உரைத்தானே செவிக்குள்ளே.
அறியாத மானுடர் நாம்
அறியவே தாள் பணிவோம்.
ஆறுமுக கடவுளவனின்
அளவிலா அருள் கிடைக்க.
அன்றாடம் துதித்திடுவோம்
ஆனந்தமாய் வாழ்வதற்கு.
=======================
No comments:
Post a Comment