பிளஸ் 2 தேர்வுகள் = 2016 மார்ச் 4ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1ம் தேதி முடிவடைகிறது.
1) பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற, தமிழக கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கற்றல் கையேட்டை,
அனைத்து பாடங்களுக்கும் தயாரித்துள்ளனர். மாவட்டத்திற்கு ஒரு சிடி வழங்கப்
பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் அதை புத்தகமாக மாற்ற காலதாமதமாகும் என்பதால், www.chiefeducationalofficer.in என்ற இணைய
தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
1௦ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும்
2) பிளஸ் 2 மற்றும் 1௦ம் வகுப்புக்கான, வினா வங்கி புத்தகம் மற்றும் தீர்வு புத்தகங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில், இன்று ஜனவரி 7ம் தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்திலுள்ள பெற்றோர் ஆசிரியர் கழக அலுவலக விற்பனை மையத்திலும், சிறப்பு மையங்களிலும்
புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.
1௦ம் வகுப்பு தேர்வுகள் = 2016 மார்ச் 15ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13ம் தேதி
முடிவடைகிறது.
1) 1௦ம் வகுப்பு மட்டும், சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கு பதில் ஆறு பாடங்களுக்கு தேர்வு (தமிழ் பாடம் இணைப்பு தேர்வாக )
நடைப்பெறும்.
2) சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தங்கள் தாய் மொழி, மாநில மொழி அல்லது
விருப்பப்பாட மொழி ஒரு தாள் மட்டும் எழுத
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்ச்சிக்கு தமிழ் மொழி பாடம் தான் கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படும்.
3) *1௦ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டணமாக 115 ரூபாய், மார்ச் 20ம்
தேதிக்குள், பள்ளி தலைமை
ஆசிரியர்களிடம் செலுத்திவிட வேண்டும்.
4) தமிழ் வழியிலும், பிறமொழி வழியிலும்
படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும்
பிற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, தேர்வு
கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
#மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு, தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பது பற்றி குறிப்படப்படவில்லை. தமிழக
அரசு, மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு, தேர்வு கட்டணத்திலிருந்து எந்த நிபந்தனையுமின்றி விலக்கு அளித்து உடனடி
உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மாற்றுத்திறனாளி மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
No comments:
Post a Comment