அருமை அன்னையின் மறைவால்
அல்லல் படும் அன்பரை தோளணைத்து
ஆறுதல் கூறயியலாமல்,
வார்த்தைகள் சிலக் கொண்டு
வருடிவிட நினைத்தேனே.
நினைவுகள் அலைபாய
காயம் பட்ட உம் மனத்தைத்தான்.
காலங்கள் கரைந்தோடும்,
காயங்கள் வடுக்களாகும்.
அவர் ஆத்மா சாந்தியடைந்து,
ஆசிகள் உமையடையும்.
ஆண்டவர் அருளிளாலே.
உம் வலிகளும் மெல்ல குறையும்.
நண்பரே, தங்கள் தாயார் மறைவினால்
துயருற்றிருக்கும் உமக்கும், அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment