பரந்த மரத்தில்
கிளையொன்று முறிய
அறியாமல் அவனும்
உடந்தையாய் ஆனான்.
உடைந்த கிளையோ
ஒன்று கூடவில்லை.
துளிரும் அவ்விடத்தில்
முளைக்கவும் இல்லை.
திசைகளோ மாறி
இடிகளோ தாக்க,
கருகிப்போனது
உறவின் நினைவு.
பாசமும் பந்தமும்
பாழ்பட்டு போக,
இருண்டு கிடக்குது
ஒளிக்கதிர்கள்
அணைந்து.
அவன் மனது ஏனோ
வதைப்படுகிறது இன்று.
நிலையில்லா வாழ்வில்
அவன் செயல் குறித்து.
நல்லதை நினைத்தே
நாடினான் அன்று.
செயல்பட்ட விதமோ
சிறுமையை தந்ததே.
பார்க்கும் நேரத்தில்
குறுகிப் போகிறான்.
பாவப்பட்ட பிறப்பாய்
பரிதவித்து போகிறான்.
No comments:
Post a Comment