2015 ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்து.
பயர்நத்தம் சுட்டாலு அந்தரிகி
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சிந்தனைகள் சிறகடிக்க
சிதறியதே வார்த்தைகள்.
காலங்கள் கானல்
நீரானதே.
கானலும் வேணி(னி)லாக
அழைக்கின்றேன்
புத்தாண்டை.
கற்பகமாய், காமதேனுவாய்
காணவே விளைகின்றேன். –
வாழ்வில்
பொங்கி வரும் கடலலையின்
வெண்நுரையாய் என்றும்
பொங்கவே!
நல் புத்தாண்டும்
புலர்கவே!
புவியெல்லாம் மலர்கவே!
செம்மை செழிக்கவே!
வாழ்வாங்கு வாழ
வாழ்வும் வளர்கவே!,
வைகுந்தனின் வரம்
வேண்டி
வருடினேன் அவன் பாதமே!
No comments:
Post a Comment