Translate

Monday, June 2, 2014

பாழாய் போகும் சுற்றுச்சூழல்


வறண்டிருந்த இடங்களெல்லாம்

வளமாக மாறிடவே

வருங்கால சந்ததியர்

வேட்கை தீர அருந்திடவே

வேறுபாடு நினைக்காமல்

வெட்டினான் குளங்களை

நிறைவாக வாழ்ந்திடவே.

விசாலமான சிந்தனையால் - அன்று

விவேகமாய் கட்டி வைத்தார்.

தீமையான எண்ணங்களால்

தீயதை விதைக்கின்றார்.

குளங்களாய் இருந்த இடம்

குட்டைகளாய் ஆனதே.

நண்ணீராய் இருந்தது

கழிவுநீராய் ஆனதே.

குன்றிருந்த இடங்களையும்

குண்டு வைத்து தகர்க்கிறான்.
நீரிருந்த குளங்களையும்

குப்பைப் போட்டு நிரப்புகிறான்.

காடு இருக்கும் இடங்களையும்

கண் மூடி அழிக்கின்றான்.

காட்டு விலங்கு அத்தனையும்

கண்டபடி ஒழிக்கின்றான்.

இயற்கையாய் இருப்பதெல்லாம்

இல்லாமல் செய்வதாலே,

செயற்கையாய் படைப்பதெல்லாம்

செயலிழந்து போகுதையா.






No comments: