Translate

Thursday, January 4, 2018

சென்ரியூ வகை கவிதைகள் - 8


புலி புதரில் பதுங்கி
காத்திருந்தது இரைக்காக
கொக்கு ஒரு காலில் நீரில் நின்றபடி

ஆலமர விழுதுகள் வளர்ந்தன
பூமியைப் பார்த்தபடி
வானில் வட்டமிட்டு பறந்த கழுகு

காவல் நாய்கள் திருடனைத்தேடி
மோப்பம் பிடித்துக் கொஒண்டிருந்தன
உணவைத் தேடி பன்றிகள்

வெள்ளத்தால் ஆற்றின் மணற்கரை
கரைந்து கொண்டிருந்தது
கடும் வெப்பத்தினால் மெழுகு.

அன்னை அணைப்புக்கு ஏங்கிய குழந்தை
அலறிக் கொண்டிருந்தது
பசியினால் மற்றொரு குழந்தை.


ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: