Translate

Friday, January 5, 2018

பசி போக்குமா பணம்



படக்கவிதை- 04\01\2017 


படங்கண்டே நொந்து போனேன்
பாவப்பட்ட நிலை கண்டு.
பஞ்சாய் கரைந்ததே
பசியால் இவருடலும்.
படைத்த இறைவனின்
பகுத்தறிதலிலும் இதுவொன்றோ.

பார்த்த கண்களுக்கு
பசியாற மனம் வருமோ?
பசியாறும் கவளத்தில்
பகிர்ந்தளித்தால் ஓருரண்டு,
பறந்திடுமே இவர் பிணியும்
புண்ணியம் சிறிது சேர்ந்திடுமே.

பணங்களை மூட்டைக் கட்டி
பரணியிலே அடுக்கியிருப்போர்,
பகுத்தறிந்து சிறிதேனும்
பந்தியிட்டு உணவிட்டால்
பத்து தலைமுறையின்
பாவங்கழியும்,
என்றதை உணர்வாரோ?

பயஙுகாட்ட குண்டுகளால்
பரப்பி வைக்கும் நாடுகளேல்லாம்,
பறந்த மனநிலைக் கொண்டு
பத்திலொரு நிதியேனும்
,பாவிகளாய் உதித்து விட்ட மாக்களுக்கு
பகுதியேனும் உணவிட்டலாகதோ?

பரந்த மனம் என்று வருமோ,
பரந்த உலக மக்களுக்கு?
பரிகாசம் செய்ய தோனுதடா.
பசியால் துடிக்கும் மனிதனுக்கு
பணத்தாளை கையலளித்தால்
பசியாற உண்பாரோ அதை?

.சிந்திப்போம் செயல்படுவோம்
பசியாற நாளொன்று கவளமளிக்க
பகுத்தறிந்து சேமிப்போம்.
பசியென துடிப்போருக்கு
துளியேனும் வழங்கிடுவோம்.

ஆக்கம்:-
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன்

No comments: