Translate

Monday, January 15, 2018

என்றுணர்வர்?

என்றுணர்வர்?

கற்றிருந்தும் நமை அழிக்கும்
மூடர்களை
காசும் பணமுமா உயிர் காக்கும்.

புவி என் வளங்காத்து
பூரிப்புடன் நீர் வார்த்து
பதமாய் எனை கீறி,
பக்குவமாய் உனையூன்றி
பாதுகாப்பாய் வளர்தெடுத்தால்
பந்தியிட நாமிருப்போம்
பசியாற்றி மகிழ்விப்போம்.
பாவியவர்கள் உணர்வாரோ?

வருமந்த தலைமுறைகளுக்கு
வளமையதைத் தருவாரோ? – இல்லை
வரண்ட நிலங்களை அளிப்பாரோ?
வழிந்தோடும் நீரணைத்து
வாய்காலில் பாயவிட்டு,
நிலமதை நனைய விட்டு,
இயற்கையான நல்லுரத்தை
உயிர் பசி போல, நிலப்பசி போக்க
இதமாக பாவி விட்டு
இனியதொரு விளைச்சளெடுக்க
உழைக்குமந்த விவசாயிக்கு
ஒத்துழைப்பு அவர்களித்தால்
உறுதுணையாய் நாமிருப்போம்.
இயற்கைகள் ஒன்றிணைந்து
இன்ப வாழ்வை அவர்களுக்களிப்போம்.

ஆக்கம்:-
தவப்புதல்வன்

A.M.பத்ரி நாராயணன்

கனகா பாலன் சிறந்த வரிகள்
Manage
LoveShow more reactions
Reply4d
Sundaram Moorthi சிறப்பு
Manage
LoveShow more reactions
Reply4d
நகுலன் முகிலன் பாதி நட்பு, மீதி சமூக சிந்தனை.
Manage
LoveShow more reactions
Reply4d
LoveShow more reactions
Reply4d
Gobi Krishna அருமை ஐயா
Kannan Sasikannan இரண்டு கவிதைகளா ? இல்லை தொடர் புடைய ஒரே கவிதையா ? இரண்டு என்றால் குழுவின் விதிகளுக்கு உட்பட்டதா ? ஒன்றுதான் எழுத அனுமதி என்றால் !எதை ஏற்பது ?Dhavappudhalvan Badrinarayanan A M,கபீர் தாஸ்
Dhavappudhalvan Badrinarayanan A Mதங்கத்தமிழன்னை துணையிருக்க, தவறின்றி பதித்திடுவேன். தயக்கமின்றி உரைத்திடுவேன் தலைகணமின்றி நான். முழுமையென தோன்றியதை, முற்றுமாய் பதித்து விட்டேன். முறித்து இடைப்போடுவதோ?, முனைக் கொண்டு ஏற்பதோ? நாயகமாய் வீற்றிருக்கும் நடுவருக்கும், நல்லியக்கமதை செலுத்துமந்த நிர்வாகத்தம்பிக்கும், நாவசைக்க உரிமையுண்டு, நானியம்பும் கருத்திதுவே. நன்றி. வணக்கம்.

No comments: