Translate

Wednesday, January 3, 2018

மயக்கத்தில்



மங்கையுனை நான் காண
மாற்றுருவில் தேடி வந்தேன்.
மறந்து நீ குயிலொலியில்
மற்றவர்களை அழைத்திடாதே.

மறுத்து நீ விளிக்காமல்
மனத்தை நிலை நிறுத்து.
மாற்றத்தின் கூற்றுணர்ந்தி
மாற்றம் நிலை உணர்த்தும்

மதி மயங்கும் காலமிது
மாலை இருள் கவியும் நேரமிது.
மாற்றினத்திடம் தூது விட்டு
மனங்கலந்திட அழைப்பிட்டாய்.

மதில்களோ பெரிதாக
மாற்றுடையில் காவலிருக்க,
மதியால் கணக்கிட்டு
மறைந்து மறைந்து இங்கு வந்தேன்

மந்தகாசம் புரிகின்றாய்.
மயக்கத்தில் எனை ஆழ்த்துகிறாய்.
மதியெனது தொலைகிறது.
மந்திரமிடும் உன்னழகில்.

மாற்றிடம் தேடிசென்று
மறைந்தது உடல்கள்
மனங்கள் இரண்டும்
மலர்ந்தது ஒன்றாய்.

மாற்றங்களில், சுவையிருக்க,
மாற்றங்களால் மகிழ்வளிக்க,
மயக்கத்தில் நீர் மூழ்கியிருக்க,
மாலையிட்டேன் உம் சிரசில்..

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏🙏

No comments: