Translate

Wednesday, January 10, 2018

எசமானித் தாய்



எண்ணங்களோ சுழல்கிறது,
எப்படி நான் இயம்பிடுவேன்?
எப்படி வாழ்ந்த வாழ்க்கையது,
எங்கு போனது அனைத்துமின்று?

எட்டி நான் நடைப்போட,
எட்டும் வகையில் என்னுடனே,
எட்டியிருந்தே வருகிறது
என்னருமை செல்(ல\வ)ங்கள்.

எங்கெங்கோ தினம் அலைந்து
என்னுடனே அழைத்துச் சென்று,
என் பாசங்கள் வயிறாற,
என் விழி வழியே மனங்குளிரும்.

எட்டியிருந்து மேய்ந்தாலும்
எனை திரும்பி திரும்பி-
- பார்த்துக் கொள்ளும்.
என் குரல் கேட்கும் நேரம் வரை
ஏக்கமின்றி அவை புசிக்கும்.

எட்டி கயிறை நான் பிடித்தால்
என்னை தொடர்ந்து நடைப்போட்டு
எந்த ஒரு மறுப்புமின்றி
என்னுயிர்கள் திரும்பி வரும்.

என் முகம் பார்க்கும் போதெல்லாம்
ஏதுமறியா நிலையிருந்தும்
என்னை மகிழ்விலே ஆழ்த்திவிட
என் மீது உரசி செல்லும்.

ஏக்கங்கள் அந்த நொடி
எங்கோ சென்று மறைந்து கொள்ள,
எட்டியதை நானிழுத்து
என் கைகளை மாலையாக்கி
என்னிதழ்கள் உச்சி முகர,
என்னுடன் சேர்த்து அணைத்துக்-
-கொள்வேன்.

ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன்.🙏

No comments: