Translate

Friday, April 9, 2010

புனிதாவுக்கு அன்புடன் திருமண வாழ்த்து.

என்னுடைய யாகூ மெயிலை இடையில் பல சந்தர்ப்பங்களில் பார்க்காமல் விட்டுவிடுவேன். அதுபோல் சென்ற வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பார்க்காமல் விட்டு விட்டிருக்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக பார்க்காத பழைய மெயில்களை ஒரு பார்வை விட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண் நண்பியின் திருமண அழைப்பும் ஒன்றாக இருந்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலும் தவற விட்டுவிட்டோமே என வருத்தமும் அடைந்தேன். அவருக்கு திருமணம் ஆனதற்கு மகிழ்ச்சியையும், தவற விட்டதற்கு வருத்தத்தையும் எப்படி தெரிவிப்பது என தடுமாறிக் கொண்டிருந்த எனக்குள் தோன்றியது ஒரு வார்த்தைகளின் சங்கமம். உடனடியாக இன்று அனுப்பினேன். இதோ அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள பதிபித்திருக்கிறேன் கீழே.


புனிதமான நாளொன்றில்
புதுமண உறவு கொண்டு
புதுமனை புகுந்த உன்னை
பூம்புனல் நெஞ்சில் போங்க
புன்னகை முகத்துடனே
பூத்திருந்த பூக்களுடன்
புதுமஞ்சள் அரிசியால்
பெருவாழ்வு வாழ்ந்திட,

உற்றாரும் உறவினரும்
கூடியிருந்து உமை வாழ்த்தும்
காட்சிகளை கண் கொண்டு
காணாமல் போனாலும்,
காலம் கடந்த பின்னாலும்
கருத்திலே கொண்டுதான்
கவிதையிலே வாழ்த்தி விட்டேன்.

கனவு உலகில் நீந்திக் கொண்டு,
நிகழ்வுலகை புரிந்துக் கொண்டு,
கருத்திலே அதைக் கொண்டு,
நிசமான காதலை கைக்கொண்டு,
மங்காமகிழ்வு வாழ்விலே நிலைக் கொண்டு,
நீங்களும் புரிந்துக் கொண்டு,
நீங்கா நினைவிலே
என்றுமதை நிறுத்திக் கொண்டு,
நலமுடனே வாழ்விலே
சிறப்புகள் பல கொண்டு,
நலம் நாடும் நட்புடன்
உரிமைதனை யான் கொண்டு,
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வாழ்த்திட்டேன் இந்நாளில்.

அன்புடன்,
UNCLE,
A.M.பத்ரி நாராயணன்
(எ) தவப்புதல்வன்.


திருமணம் நடந்த தேதி: 24/ 08 /2009.
வாழ்த்திய தேதி : 09 / 04 / 2010

No comments: