ஞாயிறாய் பிறந்த அன்று
சூரியனும் மறைந்த பின்னே
மீண்டும் அது ஒளிருது
கலைஞரின் டிவியிலே
மானாடும் மயிலாடும் தொடராக
ஆட்டமும் பாட்டமும்
அற்புதமாய் இருக்குது.
நினைவுகளில் நிறைந்திருந்து
நித்தமும் இனிக்குது.
நடனமேதை கலாவுடன்
மற்றும் இருவர் கூடியே
நடுவராய் முன்னிருந்து,
மானுடன் மயிலுமே
நாட்டியமும் ஆடுது,
நாடகமும் நடத்துது.
வித்தையும் காட்டுது,
விதவிதமாய் இருக்குது.
குலுங்கி குலுங்கி சிரிக்கவே
நிகழ்ச்சிகளும் நிகழுது.
ஒன்று இரண்டு மூன்று என
விரைந்துதான் போனது.
பகுதி நாலு நேற்று தான்
துவங்கியது போல இருக்குது.
வித்தியாச போட்டியால்
விதவிதமாய் ஆட்டங்கள்.
விறுவிறுப்பாய் இருப்பதால்
விரும்பியே பார்க்கிறோம்.
புதிது புதிதாய் கற்றுக் கொள்ள,
போட்டியிலே நடுவரும்,
கருத்துகளை பங்கு வைத்து,
காட்சிகளை பிரித்துப் போட்டு,
எடுத்து சொல்லும் விதத்தாலே,
போட்டியின் சாதனையில்
எங்களதும் சளைத்ததில்லையென
தீர்ப்பிலே காட்டியே,
நிகழ்ச்சியை நிறைவு செய்ய,
எங்களின் மனங்களும்
நிகழ்வுகளில் இணையுது.
உங்களின் திறமையுடன்,
எங்களின் மனங்களும்
இயந்து இசைந்து ஆடவே,
இன்று போல் என்றுமே,
இனிக்கின்ற நாட்களாய்,
இனிதாய் நிகழ்ச்சிகள் தொடரவே,
இயம்புகின்றோம் வாழ்த்துகளை
வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!
-தவப்புதல்வன்.
தொடர்புக்கு:
A.M.பத்ரி நாராயணன்.
Mb:99414 76945
Mail Id: dhava.ambi@gmail.com
ambadri_57@yahoo.com
Blogs:- http://aambalmalar.blogspot.com
http://aasaidhaan.blogspot.com
2 comments:
அருமையான கவிதை. வாழ்க உங்க குடும்ப்பம்
முதன்முறையாக எம் வலை பதிவுக்கு கருத்து வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.
Post a Comment