மாற்றுத்திறனாளிகள், ரயில் பயண சலுகைப் பெற, அரசு டாக்டர் சான்று அளிப்பது கட்டாயம். இந்த சான்றை வழங்க ரயில்வே துறை விதித்துள்ள விதிமுறைகளை, சில அரசு டாக்டர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்வதாக புகார் எழுந்ததை முன்னிட்டு, புதிய வழிகாட்டுதல் உத்தரவை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.அதில்,...
"அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று வைத்திருக்கும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு டாக்டர்கள் மறுக்காமல் ரயில் பயண சான்று வழங்க வேண்டும் சான்று அளிக்கும் படிவத்தில் டாக்டரின் பதிவு எண்ணுடன் கூடிய முத்திரை, பணிப்புரியும் அரசு மருத்துவமனையின் முத்திரை, ஆகியவற்றை தெளிவாக தெரியும் படி முத்திரையிட்டு கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது."
இது அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும் தெரியபடுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment