ஸ்ரீ.K.பட்டாபிராமன் & ஸ்ரீமதி.சரஸ்வதி ராமன்
இடம்: ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் திரு ஈங்கோய் மலை.
தேதி: 27/07/2013 சனிக்கிழமை
சிந்தனையில் மனமிருக்கும் சிந்தித்தே முடிவெடுக்கும்.
அலையலையாய் அனுபவங்கள் அத்தனையும் உள்ளுக்குள்ளே.
அமைதியான நடையுடனே, அறிந்த ஞானியாய் நீரிருக்க.
ஆற்றலுக்கு அளவில்லை, அவையாவும் குடத்துக்குள்ளே.
பாசத்திற்கும் நேசத்திற்கும் வயதில்லை,
அரவணைக்கும் உள்ளத்திற்கு வயதோர் தடையில்லை.
இன்னிசையாய் திகழட்டும் உம் வாழ்க்கை, இல்லாளின் துணையுடனே.
பெரியோர் ஆசிகள் உமைக் காக்க,
சுற்றம், நட்பின் வாழ்த்துக்களோ பெருமழையாய் நீராட்ட,
பொங்கும் மகிழ்வுடன் நீவீர் இருந்து,
குடும்ப உறவுகள் விரிவாக, எண்ணங்களோ உமைத் தாலாட்ட,
எண்ணியெண்ணி பார்த்திருக்க, அத்தனையிலும் மகிழ்வியிருக்க,
இறைவனின் அருளோ நித்தமும் தொடர்ந்திருக்க,
பொற்றாமரை கரத்தால் அவன் வழங்க, குடும்பமுடன் நீர் பெற்றுயர,
வயதென்ன அறுபதது, தாண்டட்டும் திடமாக நூறையது.
அகவை நூறைக் கடந்தாலும் ஆனந்தம் என்றும் நிலைத்திருக்க,
ஸ்ரீ பட்டாபிராமருடன் சரஸ்வதியும்,
லக்ஷ்மிகரமாய் உடனிருக்க.
இறைக்குடும்பத்தை பிரார்த்தித்தோம் நலனும் வளமும் பெருகிடவே.
இதயங்களுக்கு இதயத்தால் வாழ்த்துக்களை சஷ்டியப்தபூர்த்தியில் சமர்ப்பித்தோம்.
பாவாவுக்கு இனிய சஷ்டியப்தபூர்த்தி நல்வாழ்த்துக்கள்.
அக்காவுக்கு நித்யசுமங்கலி மாங்கல்யதாரண நல்வாழ்த்துக்கள்.
தங்கள் ஆசிகளுக்காக,
மச்சினன் A.M. பத்ரி நாராயணன்
தங்கை: ராஜராஜேஸ்வரி
மற்றும் குடும்பத்தினர்.
No comments:
Post a Comment