இடம்: ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் திரு ஈங்கோய் மலை.
விழி மூடி திறந்தது போல
வருடமோ கழிந்தது முழுதாக.
இரண்டிலே இன்று நீ அடி வைக்க,
இதயமோ பூரித்தது மகிழ்விலே.
அசைவுகள் ஒவ்வொன்றும்
ஆனந்தத்தை அள்ளித் தர,
உன் குறும்புகளால் அனைவரின்
உள்ளமும் குளிர்வடைய,
எழுத்திலே பதியுமோ - நீ
எட்டி வைக்கும் அடிகளெல்லாம்.
நலமுடன் மகிழ்வும் உன் வாழ்வில்
ஏற்றமுடன் இணைந்து சேர்ந்து வர,
அவனருள் என்றுமே நிலைத்திருக்க.
ஆனந்தத்தில் என்றுமே நீ மகிழ்ந்திருக்க
அரவணைத்த கைகளால் அன்புடனே ஆசிகளை வழங்கினோம் யாம் உமக்கு.
இனிய நினைவுகளுடன் - இரண்டாம்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை.
நல்லாசிகளுடன்,
தாத்தா: A.M.பத்ரிநாராயணன்,
பாட்டி: ராஜராஜேஸ்வரி.
சேலம்.
No comments:
Post a Comment