Translate

Saturday, July 13, 2013

குறைவொன்றுமில்லை....




தினமும் நாளிதழ்கள் .
பக்கங்களில் செய்திகள் .
பரபரப்புக்கு பஞ்சமில்லை.
கைதுகளுக்கு குறைவில்லை.
வெட்கமும் படவில்லை
இலஞ்சத்தில் மூழ்குவதால்.

பரதேசி எனவும் விடுவதில்லை,
பாழும் செயலென நினைப்பதில்லை,
கணக்கு வழக்கு பார்ப்பதில்லை,
பணவெறிக்கோ குறைவில்லை.

வயதொன்றும் அளவில்லை.
கற்பழிப்புக்கு கண்ணில்லை.
மனசாட்சிக்கும் பயமில்லை.
சட்டத்தையும் மதிப்பதில்லை.

காமத்தினால் கள்ளக்காதல்
காசுக்காக கூட்டுக்கொள்ளை.
கூலிக்கென்று பட்டாளம்.
கூத்தடிக்குது தினந்தோறும்.

பார் அளக்க பணம் வேண்டும்.
பழுதுக்கும் பணம் வேண்டும்.
பாதுகாக்க  பணம் வேண்டும்.
பாடையாயினும்  பணம் வேண்டும்.

வேலியே மேய்கிறது பயிர்களை.
காவலனே அடிக்கிறான் கொள்ளையை.
ஆள்பவனும் ஊருஞ்சுகிறான் மக்களை.
#ஆண்டவனும் முயல்கிறான் அள்ளவே
இறைவனும் பார்க்கிறான் நடப்புகளை.
எல்லையும் அளவுக்குள் இல்லையே.


# ஆண்டவனும் = ஆட்சி செய்தவனும்

https://www.facebook.com/notes/dhavappudhalvan-badrinarayanan-a-m/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/553545731370429

No comments: