Translate

Saturday, July 20, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ravi Sarangan







கண் கொள்ளாக் கட்சியாய்
கனிந்துருகி ஓட,
மகிழ்விலே மனமும்
மலர்ந்தது கண்டு.
வாழ்த்துக்கள் பகிர
விரைந்தது மனமே.
ஊறிலா வாழ்வும்
உளம் நிறைந்த மகிழ்வும்
உயிரோட்டடமதனை
உறவுடன் கண்டு
உரு தந்த படைப்பால்,
உன்னத நட்பை
உணர்த்துமே செயல்கள்,
உம் உயரிய நிலையை.
இறைவனின் அருளோ
இறுதி வரை இருக்க,
பணிவுடன் அவனின்
பாதங்களில் பணிந்து,
பிரார்த்தித்தோம் உமக்கு
பிரியமுடன் யாமே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

அடைத்தது ஏனோ
வாசல் வழியை.
வாழ்த்துக்கள் கூற
வழியின்றி யாமும்
சன்னல் வழியே
சங்கதி சொன்னோம்.




Mr.Ravi Sarangan

No comments: