சிறந்த தமிழ் நாவல் கதாசிரியர் நண்பர் பட்டுக்கோட்டை பிராபாகர் அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துவோம் நண்பர்களே.
படைப்பாளி.
தாட்களும் காத்திருக்கும்
உம் கரத்தால் மைப்பட.
கைப்பட்ட காகிதமும் சிலிர்த்துக் கொள்ளும்
கசக்கி நீர் போட்டாலும்.
படைப்பதினால் நீ பிரம்மனானாய்
வாசித்ததால் நாங்கள் வசியமானோம்.
கருக்கொள்ளும் எண்ணங்கள்
கதைகளாய் உருவெடுக்க,
உருப்பெற்ற கதைகளெல்லாம்
உயிர் பெற்றது உம்மாலே.
உயிரோட்டம் எழுத்துகளில்
உறவாடுமது நெஞ்சங்களில்.
நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்வமைந்து
ஆக்கங்கள் தொடரட்டும் சிறப்பாக.
வாழிய நீர் பல்லாண்டென வாழ்த்தினோம்
இனிய இப்பிறந்த நன்னாளிலே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
தவப்புதல்வன்.
Dt 1/2 birth: 30/07/2013
https://www.facebook.com/photo.php?fbid=620401694666143&set=p.620401694666143&type=1&theater
No comments:
Post a Comment