Translate

Monday, July 15, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Bharaneedharan Rangamannar ( மேஜிக் பரத் )









Bharaneedharan Rangamannar

 ( மேஜிக் பரத் ) பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மேடையிலே வித்தைகளை
காட்சிகளாய் முன் விரிக்க,
முரசறையும் அவன்(உன்) கூற்றில்
செவிகளோ கூர்ந்திருக்க,
வியந்த விழிகளோ
அறியாமல் விரிந்திருக்க
வளைந்த புருவங்களோ
வில்லேந்தி நிலைக்கொள்ள,
உச்சரிக்கும் உதடுகளோ
சொல்லின்றி திறந்திருக்க,
மூச்சேற்றும் மூக்குகளோ
முற்றுமாய் விரிந்திருக்க,
தனித்த கைகளோ
ஒலியெழுப்ப காத்திருக்க,

அலை மோதும் கூட்டத்திலே
அழகான கவிதைகளாய்,
அரங்கேற்றிக் கொண்டிருந்தான் (ய் )
வித்தைகளின் வித்தகனாய் அவன் . (நீ)
 கைகளோ விரைவாக,
விரல்களோ திறமையாக,
கண்கட்டி வித்தைகளை
காட்சிகளாய் நிறைவேற்ற,

அலைமோதிய கூட்டமோ
ஆழ்ந்திருந்தது அவன் (உன்)செயலில்,
கொடியேற்றும் கொடி முதல்
கோட்டையும் கொத்தளமும்
இரண்டிடை விரலிடையே
தோற்றமும் தந்தது
இருந்ததும் மறைந்தது.
அற்புதங்கள் பல நிகழ்த்த
அரங்கமதிரும் முரசொலியாய்
அறைந்தது கையொலி செவிகளையே, 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகபிள்ளையே.

அன்புடன்,
மாமா & குடும்பம்.
https://www.facebook.com/photo.php?fbid=612713625434950&set=p.612713625434950&type=1&theater


No comments: