1) வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டபள்ளியை சேர்ந்த அண்ணாமலை (வயது 38). இவருக்கு கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் நடந்தது. இம்மாதம் 8ம் தேதி பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரத்தில் நண்பருடன் பைக்கில் பின்புறம் அமர்ந்து சென்றபோது மழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் குறுக்கில் நாய் வர, அதை காப்பாற்றும் நோக்கில் வண்டியை திருப்ப, வண்டி வழுக்கி கீழே விழுந்ததில் அண்ணாமலையின் தலையில் பலத்த அடியினால், மூளை சாவு அடைந்து விட்டார். உறவினர், மனைவியின் ஒப்புதலுடன் 6 பேருக்கு உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
2) வேலூர் அடுத்த திருவலம், சோழவரம் துத்திகாடு கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி விஷ்ணு குமார் வயது 26, இவர் இம்மாதம் 11ம் தேதி பைக்கில் முத்தரசி குப்பத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும் வழியில் மின்சாரகம்பத்தில் மூதி விபத்துக்கு உள்ளானதில், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் திவீர சிகிச்சை அளிக்கப்பட்டும், மூளை சாவு ஏற்பட்டு விட்டது. பெற்றோர்களின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
அவ்விருவரின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலுடன், அண்ணாமலையின் மனைவின் தாலிக்கையின் மஞ்சள் காயாத நிலையில், சொல்லொன்னா துயரத்திலும் உடல் உறுப்புகள் தானம் செய்த அவருக்கும், இருவரின் பெற்றோர்களுக்கும் நமது மனமார்ந்த வணக்கங்ககளை தலைதாழ்த்தி தெரிவித்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment