Translate

Tuesday, July 30, 2013

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

சென்ற ஜூலை 27ந் தேதி எமது சகோதரியின் கணவருக்கு சஷ்டியப்த பூர்த்தி (  61ம் ஆண்டு பிறந்தநாள்  ) விழாவும், அவர் மகன் (D/o Subahar Pattabiraman
 வழி பேத்திக்கு (Baby.தியா ) 2ம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், எமது மற்றொரு சகோதரி மகனுக்கு ( Siva Shankar S )பிறந்தநாள் விழாவும் ஒரே இடத்தில் (திரு ஈங்கோய் மலையில் ) விமர்ச்சையாக   கொண்டாடப்பட்டது. இதனால்  சில நாட்களாக முகநூளில் தலைக் காட்டவில்லை.




*திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள் ஒன்றாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து காவேரி நதியைக் கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். அகத்திய மாமுனிவர் ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.

நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர் இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

No comments: