Translate

Friday, August 29, 2014

போதாத பண்டிகை?





வீடுகளில் விழா கோலம்
விதவிதமாய் அலங்கரித்து 
கொண்டாடினர் மகிழ்வாக  
அகிலத்தை ஆளுகின்ற 
அன்னையவள் அகிலாண்டீஸ்வரி 
அகம் மகிழ்ந்து அருள் பாலிக்க,
அலங்கரித்தனர் .நிறைவாக.
ஆண்டவருக்கு பட்சணங்கள் 
அர்பணித்தனர் முன் வைத்து.
அள்ளித் தினித்தனர் (உண்டனர்)
அதன் சுவையை ரசித்தபடி.

வீட்டிலிருந்த பெண்களோ! 
புலர்ந்த வேளையிலே 
புத்தாடை அணிந்துக் கொண்டு, 
புதுப்பொன் பூட்டிக் கொண்டு 
புத்தொளியாய் முகம் மலர 
புதுப்பெண்ணாய் நடைப் பயில,
ஆனந்தமாய் அந்நாளோ 
அருமையாய் முடிந்தது.

பார்த்த இவன் கண்களோ 
புத்தாடை தனக்கில்லையே 
பாவமாய் தனை நினைத்து 
பரிதாபம் பட்டான் ஏக்கமுடன்.

ஆனதின் மறுநாளோ 
கூடினர் பெண்டீரே.
கூத்தாடினர் பெருமைகளை 
தொடர்பான நிகழ்வைத்தான்.
ஆஹா... என்றனர்,
ஆனந்தப்பட்டனர்,
அருமை என்றனர் - அது 
அன்றாட நிகழ்வுதான்.

ஆனாலும் வியர்த்தது 
ஆடவனொருவன் மூக்கிலே.
அல்லாடினான் அவனுமே 
ஆணுக்கோர் விழா 
தனியிலை என்றே. 
அண்டினான் சகலரை
தன் இனத்திற்கென்று 
கொண்டாடிட முடிவெடுத்து 
.

ஆலாபனைத் தொடங்கியது 
ஆலோசனையாய் அது.
அப்படியே செய்வோமென 
அதிரடியாய் முடித்தனர்.
அட்டகாசம் என்றனர் 
அனுபவம் ஏதுமின்றி.

அத்தானென வந்தாள் 
அழகான சட்டை உமக்கென
அளித்தாளே  உரசியபடி.
அன்பளிப்பாய் கருதிக் கொண்டு .
அருமையான மனையாளன்றோ
ஆனந்தத்தில் மூழ்கியவனாய்.. 
அப்பாவியாய் அவனும் தான் 
அவளிடம் வினவினானே 
இன்றெதற்கு எனக்கென்று?

ஆனந்தமாய் முகம் மலர 
அவளும் தான் உரைத்தாளே,
பத்து இலட்ச வைர நகைக்கு 
அன்பளிப்பு இதுவென்று.
அவளின்றி ஆவதில்லை 
அதிலும் துணையின்றி 
அடியிட்டுக் காட்டினார் 
அனுபவப்பட்ட பெரியவர்.

அலசிய பெண்டீரோ 
அன்பளிப்பாய் நாங்களே 
அள்ளிக் கொடுத்தனர் பெற்றோரே
ஆசை வேறோ தனியாக.

அனுதினமும் உமக்காக 
அவதிபடுவது நாங்களே!
ஆராதிக்க வேண்டாமோ 
அதிகமாய் மேலும்தான்.

அதிக உடுப்புகளோ 
அழகை இரசிக்கும் உமக்காக.  
அனுதினமா பொன்நகைகள் 
அத்தியாய் ஓரிரண்டு.

வருவாயோ உம்மிடமே 
வாங்கி தருவதாய் நீயிருக்க,
தடுப்பதாரோ  உனை - நீ 
புது உடுப்பு வாங்கிக் கொள்ள.

புத்தாடை அணிந்தபப்டி 
ஊர்வலமாய் என்னுடனே 
வந்தாலே மகிழ்ச்சித்தான் 
வருவாயோ தினமும் தான்.

ஆரம்பித்தனர் வரிசையாக 
ஆலவட்டமாய் தலை சுழல.
அகன்றால் போதுமென 
அவசரமாய் முடிச்சிட்டார் 
அமைதியாய் வாய் மூடி.

ஆட்டு உரலிலும், 
அம்மிக் கல்லிலும் 
அரைப்படும் நிலையில் 
பண்டிகைகளோ 
தினமும் உனக்கிருக்க,
மேலுமொன்று புதிதாய் 
தேவையா உனக்கு?
தனக்குள்ளே முனுமுனுத்தான் 
வேலையில்லா கிழவனிவன்.

  

No comments: