Translate

Saturday, August 23, 2014

சரியாகா மனம்.



சந்தித்தது 
சரியானது.
சலங்கையின் 
சல்லாபம் 
சலிப்பில்லா 
சங்கீதமானது.

சந்தோசமாய் 
சங்கமமானது.
சரசமாடியது 
சர்வரோக நிவாரணியாய்.

சரித்திரமுமில்லை,
சருகுமில்லை,
சாதாரணமானது.
சந்தன சாந்திட்டு 
சகலவிடத்திலும் 
சஞ்சரித்தது.

சரியில்லாதது 
சங்கிலியிட்டு 
சந்தியிலிருத்தி 
சரித்திட முயன்றது.

சங்கடமானது .  
சம்மந்தமில்லா 
சாட்சிகளாலும் 
சகலமான 
சச்சரவுகளாலும்                  
சமரசமின்றி, 
சமாதானமுமின்றி,
சட்டரங்கமாய் 
சலசலத்தது.


சஞ்சலத்திலே
சரியாகா மனம்
சனி போனதும் 
சந்திக்காலத்தில் 
சாந்தமடைந்து 
சகஜமானது. 
. .  
.

No comments: