Translate

Tuesday, August 19, 2014

இனிமையான தருணங்கள். -இன்றொரு தகவல்



வாழ்வின் முக்கியாமான தருணங்களை நிலைத்து நிற்க, பழங்காலங்களில் ஓவியங்களாய் வரைந்தார்கள், சிலைகளாய் செதுக்கினார்கள், அமைத்தார்கள். காலம் செல்லச்செல்ல புதுபுது கண்டுபிடிப்புகளினால் புகைப்பட வளர்ச்சி மிக பிரம்மாண்டமானதாக வளர்ந்துள்ளது, வளர்ந்தும் வருகிறது. இனிய தருணங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியது புகைப்படங்கள் தான்.

கேமரா என்னும் புகைப்பட சாதனம் சாதரணமான மக்கள் பயன்படுத்தயிலா வகையில் இருந்தது. புகைப்படம் எடுப்பதும், எடுத்ததை அச்சிட்டு படமாக சேமிப்பதும், புகைப்படம் எடுக்கும்போது ஏற்படும் தவறுகளால் புகைப்படச் சுருள் வீணானது. செலவு கூடியதாகவும், சிரமத்தையும் அளித்தது.

டிஜிட்டல் (Digital - எண்முறை) கேமரா எனும் புகைப்பட கருவி வந்ததும் தேவையற்ற புகைப்படங்களை அதிலேயே நீக்கிவிடக்கூடிய வசதி வந்ததும், மேலும் விரிவடைந்தது. இருப்பினும் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுக்கும் வசதி வந்ததும் செல்போன் வைத்திருக்கும் சாதாரணமானவர்களும் புகைப்படம் எடுத்து மகிழும் அளவிற்கு வளர்ச்சி மிக விரிவடைந்தது.

நாம் விரும்பிய காட்சிகளை எடுத்து ரசித்து வந்தாலும், சில அற்புதமான காட்சிகளை படமெடுக்க விரும்பிய சில நொடிகளில் அக்காட்சி நழுவி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இனி இதுபோன்ற பிரச்சனையில்லை. நினைத்த மாத்திரத்தில் புகைப்படம் எடுக்கக்கூடிய வகையில் புளூடூத் கேமரா வந்துள்ளது.

சாதாரணமாக செல்போனில் புகைப்படம் எடுக்க, அதன் வசதியை திறந்து, பிறகுதான் உபயோகிக்க முடியும். ஆனால் புளூடூத் கேமராவில் ஒரே ஒரு பொத்தான் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அந்த பொத்தானை அழுத்தினால் போதும், புகைப்படம் எடுக்க தொடங்கி விடுகிறது.வீடியோ எடுக்க, புகைப்படம் பிடிக்க, கருவின் செயல்பாட்டை நிறுத்த அனைத்திற்கும், இந்த ஒரே சுட்சிதான்.

தினசரி 100 படங்கள் எடுப்பதாக கணக்கிட்டால், பேட்டரி 2 வருடங்களுக்கு நீடித்து உழைக்குமாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த புளூடூத் கருவி இயங்குமாம். இக்கேமராவை அமெரிக்காவை சேர்ந்த எச்.ஐ.எஸ்..ஒய். என்ற நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை 25 அமெரிக்க டாலர்கள். இது ஒரு நாளிதழ் செய்தி. விசாரித்துக் கொள்ளவும்..


#இப்புகைப்படன் மாதிரிக்காக மட்டுமே.

No comments: