Translate

Tuesday, August 5, 2014

யாரிங்கே?


திரைக்கூறும் வார்த்தைகள் 
வேதங்களாய் மாறிவிட,
வாழ்வின் அர்த்தங்கள் 
காற்றிலே பறந்து விட,

டீக்கடை பெஞ்சுகளும் 
மதுக்கூட சாலைகளும் 
நிரந்தர வாசமாய் 
நண்பேண்டா கூட்டமுடன்.

மச்சான்கள் கைக்குலுக்கி 
மார்போடு மோதியணைத்து 
போலியாய் ஒடுமது 
தேவைகள் உள்ளவரை.

மண்ணுலக தேவதைகள் 
தம் நிலையை நினைவிற்கொண்டு
(தம் நிலையைஉயர்த்திக் கொள்ள)
அங்குமிங்கும் உலவக்கண்டு 
தங்களுக்குள் பிரித்துக் கொள்வர் 
ஒருதலையாய் முடிவெடுத்து 
என்னவள் அவளென்று.

அறியா மற்றொருவன் 
இடையிலே நுழைந்து விட்டால் 
முஷ்டிகள் மடங்குமது 
எதிரி நாட்டு வீரர்களாய்.

அறியாத தேவதையோ 
தனக்கேற்ற நல்மகனை 
குடும்பத் தலைவனாய் 
வரிந்துக் கொள்ள முடிவெடுத்தால்?

அலைந்தாலும் அலைவான் 
தாடியை வளர்த்துக் கொண்டு.
மூழ்கினாலும் மூழ்குவான் 
மதுக்கூடமே தன்னிருப்பென்று.( தனதென்று)

தன்னிலை மறந்து விட்டு 
தனக்கே இவளென்று 
தறிக்கெட்டு படையெடுப்பான்
தரமில்லா நிலையிலவன்.

வெறிக்கொண்ட வேங்கையாய் 
மதம் பிடித்த களிறாய் 
அழித்துவிட நினைப்பான் 
அத்தனையும் அடியோடு.

தனக்கவள்  இல்லையென்றால் 
யாருக்கும் அவளழகு இனியில்லை 
என்றவனே முடிவெடுப்பான் 
எரிப்பொருளை கையிலெடுத்து.

சாத்திரங்கள் பயன்றதில்லை 
நல்லொழுக்கம் கற்றதில்லை.
ஆணவமாய் நடந்திடுவான் 
தனக்கவள் அடிமையென்று.

திரைக் காட்டிய காட்சிகள் 
தேவவாக்காய் அவனுக்கு.
துறையினரை அனுகிவிட்டால் 
பொங்கி விடுவர் நடப்பென்று.

நல்லாட்சி நடந்தாலே ,
நாட்டிலுள்ளோர் திருந்திடுவர்.
நடக்குமென்பது கனவாமோ 
நடப்பிலுள்ள நிலையாலே.

கடமைகளை மறந்து விட்டு 
காசு பார்க்கும் காலமிதில் 
கரை அரித்த நிலையினிலே 
கரைவதில் அர்த்தமென்ன?

கவலைப்பட யாருமுண்டோ - இக்  
காட்சிகளைக் களைவதற்கு     
கனமான மனமுடன் 
சேதமாகும் கண்ணீரும். 

No comments: