Translate

Friday, August 22, 2014

மூழ்காதீர்... இன்றொரு தகவல்




இப்பொழுது மிக முக்கிய பொழுது போக்கு பாதையாக  கணினி வழி முகநூல் (Facebook ) அல்லல் பட்டு வருகிறது. சமிப காலமாக, தினந்தோறும் தங்கள் புகைப்படங்களை விதவிதமாக பதிவிட வேண்டுமென்ற ஆவல் அதிகரித்து வருகிறது.

ஒரு வாலிபன், தான் இரயில் வரும் நேரத்தில் திரிலிங்கான  தொடர்காட்சிகளையும், புகைப்படங்களையும் எடுத்து முகநூளில் வெளியிட ஆவல் கொண்டு, நண்பர்களிடம் புகைப்பட கருவியை கொடுத்து, இப்படியும் அப்படியுமாக போஸ் கொடுத்து, எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் இரயில் அருகில் வந்து விட்டதையும் கவனிக்க தவறியதால், இரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். அக்காட்சியும் புகைப்படத்தில் பதிந்திருந்தது.

மற்றொரு வலிபனுக்கோ, தான் தூக்கில் தொங்குவது போல, தன்னைத்தானே தொடர்காட்சி எடுத்துக் கொள்ள நினைத்து, வீட்டில் யாருமில்லா நேரத்தில் தன் அறையில், அறையையும் பூட்டி விட்டு,  கைப்பேசியை இயக்கி பொருத்தி விட்டு, தூக்கில் தொங்குவதுபோல் பாவனை கொடுக்க முயல, தவறுதலாகி, முடிச்சவிழ்க இயலாமல் உயிரிழந்தான். வீட்டிற்கு திரும்பிய பெற்றோர்கள், தங்களிடமிருந்த சாவியால் வீட்டுக்கதவை திறந்து உள்ளே வந்து மகன் அறைக்கதவை திறக்க முடியாமல் உடைக்க, தூக்கில் தொங்கி இறந்திருப்பதும், கைப்பேசியில் காட்சிகள் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.

அடுத்தது காதல் கொலை. பெங்களூரு வாலிபன் அங்கேயே கம்பனியில் நல்ல வேளையில் இருந்தான். அவனுக்கு முகநூளில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் நண்பியானாள். அதிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தும்,  சாட்டில் பேசியதிலும் அவளிடம் மயங்கி காதலிக்க தொடங்கி விட்டான். அவன் சந்திக்க விரும்பிய போதெல்லாம், ஏதோ ஒரு காரணம் கூறி தவிர்க்க, சிறிது காலம்  இப்படியே செல்ல, ஒரு வழியாய் விலாசம் அறிந்துக் கொண்டு, விரைந்தான் அவளைக் காண. கண்டதும் அதிர்ந்தான். காரணம் அவள் 40 வயதிற்கு மேலான பெண்மணி. இவனோ 24 வயது காளை.  வந்ததே கோபம் அவனுக்கு, தன்னை ஏமாற்றி விட்டதாக சண்டையிட்டவன். கோபம் தாளாமல், அங்கிருந்த கத்தியை எடுத்து.... அவ்வளவுதான் அவள் கதையை முடித்து விட்டான். காரணம் அறியாமல் தடுமாறிய காவல்துறை, கணினியையும், கணிநித்தகவல்களையும் பொறுக்கியபோது தெரிந்தது விவகாரம்.

செய்தி: நாளிதழ்கள்        

No comments: