சொல்லொன்று உண்டு
தாயே சிறந்த கோவிலென்று
புரிந்துக் கொள்ள வேண்டும்
அ(த்)தை உமைக் கண்டு.
ஒவ்வொரு கணமும்
எங்கள் நினைவிலே
உங்கள் அயராத உழைப்பும்
கள்ளமில்லா பாசமும்.
ஓயாமல் உழைத்தாலும்
கடனென நினைக்கவில்லை
உடலது சோர்ந்தாலும்
உள்ளமது சோரவில்லை.
கழிகிறது வாழ்க்கைப் பக்கம்
நலிகிறது உடலோருப் பக்கம்
ஆனால், கலங்கவில்லை நீங்கள்
மன உறுதியில் மட்டும்.
ஓய்வு எடுக்குமாம் ராணித்தேனீ
வேலை செய்யுமாம் வேலைக்காரத் தேனீ
ஆனாலோ, ஓய்வின்றி பணிபுரிகின்றீர்
ராணியாய் இருந்தும்.
கையில் கிடைத்த போது
உறுதியில்லா அஸ்திவாரம்
பலப்படுத்தி மாளிகையாய்
பார்க்கின்றீர் வெற்றியுடன்.
மாளிகையின் ஒவ்வொரு துகளிலும்
உங்கள் உழைப்பின்
வேர்வைத் துளிகள்.
வியந்துக் கொண்டு இருக்கிறோம்
அதைக் கண்டு நாங்கள்.
நீங்கள் - கீழே இருந்துக் கொண்டு
ஏற்றி விட்டீர் மேலே.
காலத்தின் முடிவு வரை
முடிவுக்கோ எல்லையின்றி
உடலிலே நோயின்றி
மனத்திலே கலக்கமின்றி
மகிழ்வாக நலமாக
தாங்கள் வாழ வேண்டும்
என்பதே எங்கள் அவா.
இது உங்களுக்காக
இறைவனிடம்
எங்கள் பிரார்த்தனை.
பின் குறிப்பு:-
தாயைப் போன்ற எமது மாமியாரின் 80 வது பிறந்தநாளுக்காக சிறிய சமர்ப்பணம்.
சுமார் 5 வருடங்களுக்கு முன்.
http://www.facebook.com/note.php?note_id=153070741417932&comments
- நேசித்து பகிர்ந்துக் கொண்டவர்கள்:-
Sathiabama Sandaran Satia கழிகிறது வாழ்க்கைப் பக்கம் நலிகிறது உடலோருப் பக்கம்
ஆனால், கலங்கவில்லை நீங்கள் மன உறுதியில் மட்டும்.// aha.. aha... enna varigal badri sir!! asattal pongga..!!!February 18 at 4:54pm · · 2 people
Sathiabama Sandaran Satia arumaiyana anbu kaaviyam endruthan sollanum sir... please keep on writing... !February 18 at 4:54pm · · 2 people
Vishnu Rajan அருமை நண்பரே ..அழகான வாழ்த்தும் பாராட்டும் கூடிய கவிதை மிக நன்று ..
அருமை அருமை ..:)February 18 at 4:57pm · · 2 people
Shanmuga Murthy தங்களின் மாமியார் அவர்களின் பணி எத்துனை சிறப்புடையதாக இருந்திருந்தால்.இத்தகைய ஒரு
வெளிப்பாடு தங்கள் உள்ளத்திலிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை உணர முடிகிறது...
கொடுத்துவைத்தவர்.
நீங்களும் உங்கள் அத்தையும்.February 18 at 8:05pm · · 1 person
Sakthi Sakthithasan அன்பின் நண்பரே,
அருமையான் பிறந்தநாள் கவிதை. பெற்ற தாயையே கவனிக்க நேரமில்லாமல் ஓடும் இந்த உலகில் உங்கள் மாமியாருக்காக நீங்கள் வடித்த இந்தக் கவிதை அற்புதம்.
அன்புடன்
சக்திFebruary 19 at 9:02pm · · 1 person



2 comments:
இனிய புது வருட வாழ்த்துகள்.!
நன்றி சகோதரி. இனிதாகவும் மகிழ்வாகவும் கழிய எமது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment