நட்பிலே தொடங்கியது
கனவிலே வந்ததேன்?
கனவிலே வந்ததால்
கற்பனையில் மிதந்ததேன்?
கற்பனையில் நினைத்தது
காதலாய் ஆனதேன்?
காதலாய் தொடர்ந்தது
கலவிலே முடிந்ததேன்?
கலவிலே முடிந்ததும்
கருவாய் உதித்ததேன்?
கருவென்று அறிந்ததும்
காற்றாய் அவன் பறந்ததேன்?
காற்றாய் அவன் மறைந்ததும்
கன்னியவள் அழுத்தேன்?
கன்னியவள் அழுத்தும்
கணவனாய் (கள்வனவன்) வருவானா?
கணவனாய் (கள்வனவன்) வந்ததும்
கற்பு அது மீண்டதா?
கற்பு என நினைத்ததும்
கட்டவிழ்த்து கொண்டதோ?
கட்டவிழ்த்துக் கொண்டதும்
கடமையது முடிந்ததோ?
கடமையென நினைத்ததும்
கடலலைகளாய் வந்ததோ?
கடலலைகளாய் வந்ததும்
கவிதையாய் பிறந்ததோ?
கவிதையாய் பிறந்ததும்
நட்பதும் முறிந்ததோ?
முகநூலில் (Face Book in My note) கருத்து பதித்தவர்கள்:-
- Sylvia Velanganni Arumayaana padaippu DP Sir....
நட்பிலே தொடங்கியது
கனவிலே வந்ததேன்?March 5 at 7:20pm · · 2 people - Sadeek Ali Abdullah சண்முகம் அண்ணா சொன்னதை வழிமொழிகிறேன்..
கல்யாணத்துக்கு முன்னால் காதலென்றாலே அதில் கலவியை பெரும்பாலும் தவிர்க்கமுடிவதில்லை... உன்னதமான் காதலெல்லாம் குறைந்து விட்டது. இது டேட்டிங் யுகம்.... இதில் கருவை நினைத்து கவலைப்பட யாரும் தயாராயில்லை...March 5 at 8:53pm · · 2 people - Dhavappudhalvan Badrinarayanan A M உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. இரவு வணக்கம் நண்பர்களே.March 7 at 10:19pm · · 1 person
- Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
கவிதை நன்றாக இருக்கிறது.
அன்புடன்
சக்திTuesday at 7:59am ·இக்கவிதையை விரும்பியவர்கள்:-
No comments:
Post a Comment