Translate

Thursday, June 14, 2018

என்று தணியும் தாகமிது






நீரெடுக்க நெடுந்தூரம்
ஒற்றை வழி பாதையிடையே,
காலனியில்லா காலோடு
கனிய வைக்கும் வெயிலோடு,
கசிந்துருகும் வியர்வையோடு,
ஒரு பானை நீருக்காய்
கால் கடுக்க வழி நடக்கும்
அவல நிலை நிறைந்திருக்க.
அல்லல்படும் மக்களின்
உணர்வுகளை
உணராமல் போனதேனோ? 27

அன்று ஆண்ட மன்னர்கள் உணர்ந்திருந்தார்
அனைத்தூர்களிலும் நீருக்கு வழி செய்தார்.
ஆறுகளில் அணைகளையும்
.குளம் குட்டை வெட்டி,
ஏரிகளையும அமைத்திட்டார் 42

இன்றோ அபகரித்து அழித்து விட்டார்,
நீர்வழிகளை அடைத்து விட்டார்
நீரின்றி செய்து விட்டார்
மக்களை அலைய விட்டார். 55

மக்களிதை உணர்வாரோ?
பூண்டோடு அழிந்திடாமல்
புவியும் செழித்திருக்க,
புணரமைத்து வாழ்வாரோ? 63

தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்




No comments: