Translate

Wednesday, June 29, 2016

வாலறுந்த எலி



வாலறுந்த நரி கதைக் கேட்டிருக்கிறோம். ஆமாம் இது என்ன புது கதையாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா? படிங்க தெரியும் நண்பர்களே.

எலிகளை ஒழிக்க கூடுகள் இடிக்கிகள் மருந்துகள் பல இருந்தாலும் அத்தனையிலும் தப்பித்து உயிர் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன எலிகள். அதுபோலவே
எலிகளை ஒழிப்பதற்காக புதுபுது வழிகளை / உபாயங்களை மனிதர்களும் கடைப்பிடிப்பது தான் வருகின்றனர்.
இப்போது நான் கூறுவதை
எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம் அறிந்திருக்கலாம். ஆனால் இப்போது தான் நான் பார்த்தேன். அதில் சுவாரசியமான தகவல் இருந்ததால், உடனே உங்களுடன்.
 பெரியவர்களின் உள்ளங்கையை விட பெரிதாக, செவ்வக வடிவத்தில் ஒரு அட்டை. அதன் ஒருபுறம் தார் பிசின் போன்ற பொருள் பூசப்பட்டு இருக்கிறது. வாங்கி வருகையில் நம் கையில் ஒட்டாமலிருக்க, அதன் மேல் பிளாஸ்டிக் தாள் ஒட்டப்பட்டிருக்கும். 
அந்த அட்டையை எலி நடமாட்டம் உள்ள இடத்தில் 
பிளாஸ்டிக் தாளை நீக்கிவிட்டு வைத்து விட்டால், கால் அல்லது கால்களை வைக்கும் எலி ஓடமுடியாமல் ஒட்டிக் கொள்ளும். பிறகு நம் விருப்பம், கொல்வதோ, உயிருடன் வீசி விடுவதோ.
சமிபத்தில் ஒரு எலி தொந்தரவு கொடுத்து வந்தது. அதை கொல்ல இந்த அட்டைகளை ஓரிரு இடங்களில் வைத்தோம். காலை விடிந்ததும், ஆஹா.. எலி மாட்டியிருக்குமென சென்று பார்த்தால்..... ஒரு அட்டையில் எலி வால் மட்டும் ஒட்டிக்கொண்டு இருந்தது. 
பல்லி மற்றும் சில உயிரினங்கள் தான் எதிரியிடமிருந்து தப்பித்துக் கொள்ள, தங்கள் வாலை துண்டித்துக் கொண்டு ஓடி போய் விடும். இடுக்கியில் எலியின் வால் மாட்டிக் கொண்டால் கூட, தப்பித்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்குமே தவிர, தன்  வாலை துண்டித்துக் கொண்டு ஓடி விட்டதை இதுவரை பார்த்ததில்லை. இந்த பசையில் ஒட்டிக் கொண்ட எலி,தன் வாலை துண்டித்துக் கொண்டு தப்பி விட்டிருந்தது. 
ஹ.. ஹா... மறுநாள் கோபத்துடன் வந்த எலி, ஒரு மரச்சாமான் சிறு பகுதியை கொரித்து விட்டு சென்றிருந்தது. அதன் பிறகு எலி வந்ததற்கான அடையாளங்களைம் எச்சங்களைம் காணோம்.

# மீண்டும் புது எலி எப்பொழுது வருமோ? 

என்ன தந்திரங்கள் செய்யுமோ?

No comments: