Translate

Friday, June 10, 2016

முதல் காதல்


பார்த்திருந்தேன்
சன்னல் வழியே வானத்தையே.
அகல நினைத்து
கை வைத்தேன் கதவிடையே.
கண் கூசும் மின்னலடிக்க
தவித்து நின்றேன்.
எதிர் வீட்டு சன்னலிலே
முழு நிலா முகங்கண்டு.
கண்ட நிலா…
எனை நோக்கி முகம் பூக்க,
மயக்கத்தில் நானோ
கையசைக்க,
கை நிறைந்த முத்தத்தை
காற்றலையில் பறக்க விட்டாள்
எனை நோக்கி.
சிந்தாமல் சிதறாமல்
பிடித்து விட்டேன்,
காற்றலையில்
வந்தடைந்த முத்தத்தையே.
வீட்டிடை இடைவெளியோ
நீண்டிருக்க,
கண் வழியே முகம் பூக்க,
கையசைத்துப் பேசிக்கொண்டோம்
வாய் பேச வழியின்றி.


என் முன்னே நடைப்பயின்றாள்
அண்ணக்கொடி.
எதிர்நோக்க நிலையினிலே
நேரெதிரேப் பார்த்துக்கொண்டோம்.
கண்டவுடன் நானும்
அவளை புரிந்துக் கொள்ள,
பார்த்த அவளும்
என் முகத்தை நினைவிற் கொண்டாள்.
ரோசாவாய் பூத்த முகம்
அடுத்த நொடி கருகி விட,
இடம் விட்டு விரைந்து விட்டாள்
தலை குனிந்து.
பொருளறியா நான்(னோ)
வருத்தம் கொள்ள,
தஞ்சமடைந்தேன் சன்னலிடை
அவளைக் காண.
நொடிகளோ கரைந்தது நாட்களாக,
மீண்டும் காணவில்லை
சன்னலிடையே
அந்த நிலா.

என் நிலையை,
சோதனை செய்துக் கொண்டேன்.
நினைக்காத நிலையொன்றை
அறிந்துக் கொண்டேன்.
பார்த்திருந்தோம், மகிழ்ந்திருந்தோம்
சன்னல் வழியே.
இத்தனை நாள், என் ஊனம்
அவளறிய வாய்ப்பில்லை.
என் உடல் ஊனம் கண்ட அவள்,
தன் காதலை(யே) களைத்துக் கொண்டாள்.
கண் கண்ட காதலோ…
கருகி விட்டது,
ஒரு சொல் பேசாமல்.







No comments: