Translate

Sunday, January 13, 2013

பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2013


பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பாலுடன் பச்சரிசி
உலைக் கொதிக்க,
உருக்கு நெய்
அத்துடன் செர்ந்துருக,
முந்திரியும் திரட்சையும்
வெல்லமுடன் சேர்ந்தணைக்க,
ஏலத்தின் மணமோ
எட்டுதிக்கும் புகழ் பரப்ப,
நாசி வழி உள்னுழைந்து
வாய் வழியே நீரூற,
சப்புக் கொட்டியதே
நாவுடன் மனமும் தான்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


-தவப்புதல்வன்
13/01/2013

2 comments:

Anonymous said...

மிக்க நன்றி தங்களுக்கும் இன்பப் பொங்கல் வாழ்த்துக்கள்.

Dhavappudhalvan said...

மிக்க மகிழ்ச்சி, தங்கள் வாழ்த்துக்கு. மகிழ்வான நாட்களாக அமையட்டும் இவ்வினிய பொங்கலுடன் தொடர்ந்து.@ kovaikkavi