காத்திருந்த வேளையிலே
கண்களோ அலைப்பாய,
பதிந்தது ஓரிடம்,
உயர்ந்தது புருவம்,
தெரிந்தது உண்மை,
மகிழ்ந்தது மனம்.
ஓங்கி ஒலித்தது
ஒற்றுமையின் நிலை.
"ஃபைவ் பிரதர்ஸ் மட்டன் ஸ்டால்"
* இதே போன்று வித்தியாசமான பெயர்களில் கடைகளைக் கண்டேன். அதில் பெயர் நினைவில் நின்ற சிலவற்றை.
"இரட்டையர் முடி திருத்தகம்".
"அலையகம்" (Cell Shop )
மேலும் இன்று ஒரு கடை பெயரைக் கண்டேன்.
"டெலி கடை" ( Tele Kadai )
என்ற பெயரில் கூரியர் நிறுவனம்.
நீங்களும் கவனித்திருப்பீர்கள் வித்தியாசமான பெயர்களை. அதில் உங்கள் கடை, நிறுவன பெயர்களும் இருக்கலாம். அதை பதியுங்களேன்.
சில தொழில்களுக்கு, இப்படி பெயர் வைக்கலாமே என சில, பல பெயர்கள் உங்களுக்கு உதித்திருக்கும், நினைவிலும் இருக்கும். அப்படிப்பட்ட பெயர்களை பதிவு செய்யுங்களேன்.
* பார்த்தது / உதித்தது என தெளிவாக குறிப்பிடுங்கள்.
No comments:
Post a Comment