Translate

Sunday, March 17, 2013

தமிழ்நாட்டிலும் ஒரு ஷாஜகான்



தமிழ்நாடு புதுக்கோட்டை உசிலம்குளத்தை சேர்ந்த சுப்பையா தான் இந்த ஷாஜகான். அவர் சொல்வதை கொஞ்சம் கேளுங்க....


    என் மாமா பொண்ணு சென்பகவள்ளி. சின்ன வயசுல இருந்தே, ஒருவர் மேல ஒருவர் பிரியம் வெச்சு வளர்ந்தோம்.கல்யாண வயசு வந்ததும், வீட்டிலே பேசி சேர்த்து வெச்சாங்க. நான் எதிர்ப்பார்த்ததை விட, அன்பான மனைவியா, அக்கறையான குதும்பத்தலைவியா இருந்தாங்க.
 குடும்ப செலவுக்கு பணம் மட்டும் தான் கொடுப்பேன். மத்த எல்லாத்தையுமே பொருப்பெடுத்து பாத்துக்கிட்டாங்க. இடையில் வேலை பாக்கிறத்துக்காக, கோல்கத்தாபோயிட்டேன். கடிதம் தான் தொலைதூரத்திலிருந்த எங்களை சேத்து வைக்கிற அன்பு சங்கிலி.
எங்களுக்கு 10 பிள்ளைங்க. அதுல இரண்டு தவறி போச்சிங்க. மத்த 4 ஆம்பிளை புள்ளைங்களையும், 4 பொம்பள  புள்ளைங்களையும், சென்பகவள்ளி பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க. அவ்வளவு ஆசையா அன்பா புள்ளைங்களை கொண்டாடுவாங்க. அதே பாசம் தான் எனக்கும் தருவாங்க.
குடும்பத்துக்காக உழைச்சவங்க, தன்னோட உடம்ப பார்த்துக்காம விட்டுட்டாங்க. சிறுநீரக (கிட்னி) கோளாறு வந்துடுச்சு. என்னால, முடிஞ்ச அளவு செலவு செய்து பார்த்தேன். 2006லே என்னை தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டாங்க. அப்ப அவங்களுக்கு 63 வயசு.
இராமாயணத்தில, அஸ்வமேத ஆகம் செய்ய,சீதை இல்லாத்தால் ராமர் சிதை சிலை செய்து வைப்பார். அதுமாதிரி, சென்பகவள்ளி இந்த குடும்பத்துக்காக உழைச்ச உழைப்பை கவுரவப்படுத்தவும், என் காதலை வெளிப்படுத்தவும், நானும் என் சென்பகவள்ளியை சிலையா செஞ்சு என் கூடவே வெச்சிகனுமுனு நினைச்சேன்.
ஒய்வூதியப் பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு, 2 இரண்டு இலட்ச ரூபாய் சேர்ந்த்தும், 2009ம் வருஷம் கும்பகோணம் போய் சிலை செஞ்சிக்கிட்டு வந்தேன்.
சித்திரை நட்சத்திரம் அவங்களுக்கு, அதனால ஒவ்வொரு மாசமும் சித்திரை நட்சத்திரலே அவங்களுக்கு பால் பன்னீர், தேன் அபிஷேகம் செய்வேன். அவங்களோட பிறந்த நாள் அன்னிக்கு இல்லாதவங்களுக்கு சாப்பாடு போடுவேன்.
 சென்பகவள்ளி  என்னை விட்டுட்டு போன வருத்தம் இப்ப என் கிட்ட இல்ல. என் கூடவே இருக்கிற மாதிரி தான் இருக்கு. இந்த சிலைக்கு உள்ள தான் அவங்க உயிர் இருக்கு.



No comments: