Translate

Friday, March 15, 2013

வார்த்தைகளைப் புரிந்துக் கொள்வோம்

துணிந்தவனுக்கு துக்கமில்லை
துவண்டவனுக்கோ தூக்கமில்லை.
இது அறியாத சொல்லில்லை
பற்றிக் கொண்டால் அழிவில்லை.

சொல்லும் தகுதியோ எமக்கில்லை.
சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பங்கு பெறுவதில் தொல்லையில்லை.
ஆறுதலுக்கு என்று
ம்  எல்லையில்லை.

வாழ்விலே எதுவுமே நிலையில்லை,
ஏக்கத்தினால் அமைதி அடைவதியில்லை.
அன்பும் பாசமும் வாழ்வின் எல்லை,
அறிந்துக்கொள்ள மறுத்தால் வார்த்தையில்லை.

குறையில்லா மனிதர் உலகிலில்லை
உணர்ந்தவருக்கு மாற்றோர் நிகரில்லை.
அனுபவித்த வாழ்வே உண்மைநிலை.
அறிந்துக் கொள்வதே 
வாழ்வின் உயர்நிலை
இதயமது இயங்கும் வரை உயிரது பிரிவதில்லை.
உயிரற்றுப் போன பின்னே உறவது தொடரவதில்லை.
இல்லையென்பது இனியில்லை.
கண்ணீருக்கு இனி வழியில்லை.

நம் குறையெண்ணிக் குமையாமல் 
நிறை நினைத்து திலைத்திடுவோம்.
இனி முடிவதை செவிமடுப்போம் 
அம்முடிவிற்கு உயிர் கொடுப்போம்.


இறைவனால் படைக்கப் பட்டோம்.
இருக்கும் வரை வாழ்ந்திடுவோம்.
இன்பத்தில் தோய்ந்த நாட்களை
இனி தொடர்ந்தே நினைத்திருப்போம்.

'இதுவும் கடந்து போகும்,
இன்னுமும் கடந்து போகும் "
வார்த்தைகளைப் புரிந்துக் கொள்வோம்.
வாழ்வை அமைதியாய் கழித்து செல்வோம்.


1 comment:

Dhavappudhalvan said...


Vetha ELangathilakam ''..'இதுவும் கடந்து போகும்,

இன்னுமும் கடந்து போகும் "

வார்த்தைகளைப் புரிந்துக் கொள்வோம்.

வாழ்வை அமைதியாய் கழித்து செல்வோம்...'' arumai...nalvaalththu...
March 16 at 1:34am · Unlike · 1

Ravi Sarangan ஜெய் ஸ்ரீமன் நாராயணா! இனிய சனிவாரம் இறைவனின் கருணையில் தங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கட்டும்.
March 16 at 7:36am · Unlike · 1

Ravi Sarangan இனிய உளவாக இன்னாது கூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்ற வள்ளுவ வாக்கின்படி இனிய சொல்லை பேசினால் வாழ்வு அமைதியாகவும் சந்தோஷமாகவும் செல்லும் என்று அருமையாக உணர்த்தினீர்கள் Dhavappudhalvan Badrinarayanan A M Sir, தாஸன்.
March 16 at 7:37am · Unlike · 1

Ramadhas Muthuswamy · 9 mutual friends
// துணிந்தவனுக்கு துக்கமில்லை
துவண்டவனுக்கோ தூக்கமில்லை.
இது அறியாத சொல்லில்லை
பற்றிக் கொண்டால் அழிவில்லை.// .... மிகவும் அருமை!!!
March 16 at 8:19am · Unlike · 2

ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா · 36 mutual friends
அருமை!! வாழ்த்துக்கள் ஐயா!!
March 16 at 10:36am · Unlike · 3

Vishnu Rajan அருமை அருமை எனதன்பு நண்பரே ..இனிய காலை வணக்கம்
March 16 at 11:11am · Unlike · 2

சங்கரன் ஜி வி arumai
March 16 at 12:46pm · Unlike · 1

Sathiabama Sandaran Satia arumai...
March 16 at 5:08pm · Unlike · 2

Shanmuga Murthy அருமை. ஆம்.'இதுவும் கடந்துதான் போகும்'.
March 17 at 8:28am · Unlike · 1

இராஜ. தியாகராஜன் அருமையான பாடலிது! வாழ்த்துகள் கவிஞரே!
March 17 at 10:58am · Edited · Unlike · 1

வித்யாசாகர் குவைத் //குறையில்லா மனிதர் உலகிலில்லை
உணர்ந்தவருக்கு மாற்றோர் நிகரில்லை,

அனுபவித்த வாழ்வே உண்மைநிலை
அறிந்துக் கொள்வதே உயர்நிலை// எனக்கு மிகப் பிடித்தது ஐயா. வாழ்ந்தவர் பேசுவது எடுபடும். உங்கள் வார்த்தைகள் எமைப் போன்றோருக்கு பட்டறிவு போல. மிக்க நன்றியும் வணக்கமும்..
March 17 at 8:17pm · Unlike · 1

Dhavappudhalvan Badrinarayanan A M எமதினிய தோழமைகளே உங்கள் கருத்துகளை சுவாசுத்தேன். @ Vetha ELangathilakam, Ravi Sarangan, Ramadhas Muthuswamy, ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா,
Vishnu Rajan, சங்கரன் ஜி வி, Sathiabama Sandaran Satia, Shanmuga Murthy, இராஜ. தியாகராஜன், வித்யாசாகர் குவைத் மற்றும் விருப்பகுறியிட்ட நண்பர்களுக்கும் மகிழ்வுடன் வணக்கம்.
March 17 at 8:32pm · Like · 1

வீரபாண்டியன் Veera நம் குறையெண்ணிக் குமையாமல்

நிறை நினைத்து திலைத்திடுவோம்.
March 28 at 2:32pm · Unlike · 1