முறையான அவனோ,
முறையெனச் சொல்லி,
முரட்டுத்தனமாய்,
முறையான அவளின்
முந்தானையை இழுத்தான்.
முறையான அவளோ,
முறைக்கின்ற நிலையில்,
முறையில்லை இதுவென
முடிவாகச் சொல்லி
முறித்தாள் உறவை.
முடிவைக் கேட்டு,
முகமோ சிறுக்க,
முறைகளை இழந்து
முடியை வளர்த்து
முகமற்றுப் போனான்
முடிவில்லா நிலையில்
No comments:
Post a Comment