Translate

Friday, June 15, 2007

இதயத்தைத் தேடி!!!

என் இதயமதை
கொடுத்து வைத்தேன்
உன்னிடத்திலே.

நீயும் அதை
தொலைத்து விட்டாய்
வேறு இடத்திலே.

தொலைத்து போன இதயமதை
தேடிச் செல்கிறேன்.
போன இடம் அறியாமல்
வாடி நிற்கிறேன்.

இதயமில்லா மனிதனாக
ஆக்கி விடாதே.
இரக்கமுள்ள மனிதனாக
இறைஞ்சி நிற்கிறேன்.

கனிவுடனே தேடி
அதைக் காத்திடுவாயே.
கிடைத்த செய்தி சொல்லி
எனை தேற்றிடுவாயே.


வாசகப்பெருமக்களின் எண்ணச்சிதறல்கள்:-


  • Graphicdesigner like this.

    • Jayanthy Morais நீ கொடுத்து வைத்த இதயமதை பறித்து சென்றான்
      இதயமில்லா ஒருவன்
      நானுமதை தேடுகிறேன்
      துணையாக நீயும் வா....

      February 22 at 11:03pm · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M கிடைத்த செய்தி சொல்லி எனை தேற்றிடுவாயே என சொன்னா, என்னையும் உடன் அழைக்கிறாயே சகோதரி. சரி வந்துதானே ஆகனும். தொலைந்தது என் இதயமாச்சே.
      February 22 at 11:10pm · · 1 person

    • Jayanthy Morais தனிவழியே செல்லும் என் இதயத்தையும் பறிக்க ஒரு புது இதய்மற்ற்வன் உருவாவானே என்ற பயம் தான்..
      February 22 at 11:15pm · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M காக்க வருவேன் உன்னுடனே. கனிவான உன் மனமறிந்தே. தோற்றுப் போவோமென நினைக்காதே. பயமது கொள்ளதே. பாவியிடம் தொலைப்போமென.
      February 22 at 11:20pm ·

    • Jayanthy Morais என்னருகே நீ இருக்க
      எனக்கென்ன கவலை
      பத்திரமாய் சேர்த்திடுவேன்
      என் பொக்கிஷமாய் உன் இதயத்தை....

      February 22 at 11:25pm ·

    • Dhavappudhalvan Badrinarayanan A M மனம் நிம்மதி அடைந்தது. இதயம் பாதுகாப்பாய் இருக்கும் உன்னிடம். கவலையில்லை எனக்கு. உறங்க செல் அமைதியாய். தேடிச் செல்வோம் பொருமையாய்.
      February 22 at 11:30pm · · 1 person

    • Jayanthy Morais Good Night Badri anna........
      February 22 at 11:31pm · · 1 person

    • Vetha ELanga vaalthukal.
      February 23 at 12:06am · · 1 person

    • Krishnamal Krish
      தொலைத்து போன இதயமதை

      தேடிச் செல்கிறேன்.

      போன இடம் அறியாமல்
      ...See More

      February 23 at 8:01am · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Krishnamal Krish:- அறியாமல் தொலைத்திரோ அன்பினால் அதை. தெரிந்தேதான் தொலைத்தீரோ தேடியதை செல்ல. மாலை வணக்கம் சகோதரிகளே ஜெ & கி.
      February 23 at 3:00pm · · 1 person

    • Shelah Viperete HMM REALLY DHAVA...tht good .
      February 25 at 1:49am · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Shelah Viperete:- tnq dear.
      February 28 at 9:25pm ·

    • Krishnamal Krish வணக்கம் பத்ரி அண்ணா.தொலைந்து போவதென்னமோ தெரியாமல் தானே....அண்ணா ...
      February 28 at 9:29pm · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Krishnamal Krish :- மனம் தொலைந்து போவதென்னமோ காதலிலும், அன்பிலும், பாசத்திலும், நட்பிலும் தன் சகோ. நட்புகளை நாடித்தானே என் இதயத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறேன். நலம் தானே சகோ?
      February 28 at 9:36pm · · 1 person

    • Krishnamal Krish நலம் அண்ணா. தாங்களும் நலமே வாழ வேண்டும் என்பதே என் அவா.
      February 28 at 9:38pm · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Krishnamal Krish :- மிக்க மகிழ்ச்சி சகோ. வாழ்வே நம்பிக்கை, ஆறுதல், அரவணைப்பில் தான். இனிதாய் தொடங்கி மகிழ்வாய் களையட்டும் உறக்கம், இரவு வணக்கம் சகோ.
      February 28 at 9:46pm · · 1 person


      எண்ணத்தை சிதறாமல் தலையாட்டியவர்கள்:-



No comments: