Translate

Wednesday, June 6, 2007

தமிழே நம் மூச்சு !!!!

வண்ணமிகு எழுத்துக்களை
வளமான வார்த்தைகளால்
வானவில்லாய் வரைந்து வைத்தேன்
வான் வியக்கும் தூரிகையால்.

வாட்போர் என்றழைத்து
வம்பளக்கும் வீணர்களை,
வான் சொரிந்த மென்தமிழால்
வறுத்தெடுத்தேன் இதமாக.

வாருங்கள் என்றழைத்து,
வழக்கமான பண்பாட்டில்,
வாரித்தான் வழங்கிடுவேன்
வசப்படுத்தும் தமிழாலே.

வானோரும் வின்னோரும்
வணக்கத்திற்குறிய பெரியோரும்
வழங்கிய தமிழில் தான்
வாசித்து (வசித்து) வருகின்றோம்.

வாசமிகு தமிழைத்தான்,
வார்த்தைகளை சீர்படுத்தி,
வளப்படுத்தி வைத்திருப்போம்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே.

சுவாசிக்கின்ற மூச்செல்லாம்
வாசிகின்ற தமிழைத்தான்.

செல்லுகின்ற பாதையெல்லாம்
சொல்லிவிட்டு போகத்தான்.

முடிகின்ற வழிகளிளெல்லாம்
வழங்கிடுவோம் வாரித்தான்.

நாட்களோ செல்லச்செல்ல
கூடுகிறது முதுமைத்தான்.

வார்த்தைகளின் வளமையால்
சேருகிறது இனிமைத்தான்.

உன்னாலே அடைகின்றோம்
நாங்களெல்லாம் பெருமைத்தான்.

நினைக்கின்ற நினைவெல்லாம்
வார்த்தைகளாய் கொட்டி வைப்போம்.

அத்தனையும் தமிழாலே
அளந்துத்தான் பார்த்திடுவோம்.

தட்டித்தான் போட்டாலும்
தாழ்ந்து நாங்கள் போவதில்லை.

தட்டித்தான் கோடுத்தாலும்
தாழ்ந்து நீங்களும் போவதில்லை.

கட்டுகின்ற கூடெல்லாம்
கெட்டியாக இருப்பதில்லை.

கட்டாமல் விட்டாலோ
கூடுவொன்று இருப்பதில்லை.

கட்டிய கூடுவென்றால்
செப்பனிட்டு வாழ்ந்திடலாம்.

கனவான கூடுவெனில்
வாழ்ந்திட இயலாதே.

என நினைத்தே
இனியத்தமிழில்
இக்கவியை யாம் வடித்தோம்.

2 comments:

c g balu said...

பொறாமை படுமளவிற்கு கிறுக்கு இருக்கிறதா? நன்றிகள்.அம்பியும் அருமையாகத்தான் உள்ளது.

Dhavappudhalvan said...

Hollo BSG, composetamil.com அரட்டை பகுதியில் உங்களுக்கான (kirukkan g என்ற பெயரில்)கடித்தைப பார்வையிட்டீர்களா? நம் கருத்துக்களை வெளியிட்டபின், அதை எப்படி திருத்துவது சொல்லிக் கொடுங்களேன்.