Translate

Friday, June 8, 2007

வந்து விடு.

வலை வழியே
எண்ணங்களின் வார்த்தைகள்
வரிகளின் ஓட்டங்கள்

விரல்களோ அடித்து வைக்க
கண்ணகளோ பார்த்து வைக்க

மனமோ துடித்துக் கொள்ள
உணர்வோ விரைத்துக் கொள்ள

வார்த்தைகளின் ஒலியின்றி
உருவத்தின் அசைவின்றி

ஏக்கத்தில் தனித்திருக்க
உனைக் காண காத்திருக்க

எண்ணத்திலோ கிளர்ச்சி
உடலிலோ தளர்ச்சி

ஏங்க வைக்காதே
வேதனையை தூண்டாதே

ஊக்கமது அளிக்க
நேரில் வருவாயே!
வருவாயோ?
வாராயோ?


  • கருத்து களஞ்சியம்:-
    • Munuswami Muthuraman ஊக்கமளிக்க உடன் வந்து அருகிருப்பாள்
      ஏக்கத்தைப் போக்கிடுவாள்
      எந்நாளும் உடனிருப்பாள்.
      February 19 at 5:37pm · · 3 people
    • Mohana Somasundram மாலை வணக்கம். கவிதை நன்று.
      February 19 at 5:57pm · · 1 person
    • Shanmuga Murthy விரல் தெறிக்கும் வார்த்தைகள்...

      மெளனமொழி பேசும்
      கைவிரல்கள்....
      இனிய கவிதை...
      February 19 at 6:07pm · · 2 people
    • Sathiabama Sandaran Satia ஊக்கமது அளிக்க நேரில் வருவாயே! வருவாயோ? வாராயோ?// அருமையான வரிகள் பத்ரி சார்... கண்டிப்பாக வருவாளே... !
      February 19 at 6:14pm · · 1 person
    • இராஜ. தியாகராஜன் உணர்வூறிய வரிகள்.
      February 19 at 6:27pm ·
    • Vetha ELanga ஏங்க வைக்காதே!
      ஊக்கமது அளிக்க
      வாராயோ?

      Vaalthukal.
      February 19 at 6:35pm · · 1 person
    • M Venkatesan MscMphil வந்து விடு.
      February 19 at 7:37pm · · 1 person
    • Sakthi Sakthithasan அன்பின் நண்பரே,
      உணர்வு எனும் வர்ணத்தைச் சொற்களுக்குப் பூசி உயிர்ப்பிக்கும் கவிதை ஒன்றைப் படைத்து விட்டீர்.
      அன்புடன்
      சக்தி
      February 19 at 9:16pm · · 1 person
    • Arul Mozhi ஏங்க வைக்காதே
      வேதனையை தூண்டாதே
      February 19 at 10:06pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Munuswami muthuraman:- எண்ணங்களெல்லாம் ஏர் பூட்ட. ஏக்கங்களெல்லாம் எழுத்தாக, ஏழுதி வைத்தேன் ஏட்டிலே. ஏறாது இனி நடைமுறையில். நன்றி ஐயா.
      February 20 at 12:45pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Mohana Somasundram:- மதிய வணக்கம் சகோ.
      February 20 at 12:46pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Shanmugu Murthy:- "மௌனமொழி பேசும் கைவிரல்கள் "

      விழிப் பேசிய மௌனமொழி, நிலைத்து நிற்க கைவிரல்கள் பதித்தது. நன்றி ஐயா. மதிய வணக்கம்.
      February 20 at 12:56pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Sathiabama Sandaran Satia:- "கண்டிப்பாக வருவாளே..!"

      கலைந்த கனவுகள்.
      February 20 at 1:00pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ இரா.தியாகராஜன்:- கவிஞரின் பாராட்டுக்கு நன்றி.
      February 20 at 1:02pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ M Venkatesan MscMphil:- " வந்து விடு "

      ஹூகும்... ஹூகும்.............
      February 20 at 1:05pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Sakthi Sakthithasan:- வணக்கம் ஐயா. தங்களின் வர்ணங்களின் அழகை விடவா? மிக்க மகிழ்ச்சி ஐயா.
      February 20 at 1:09pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Arul Mozhi:- மகிழ்ச்சி சகோதரி.
      February 20 at 1:10pm ·
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@Vetha ELanga:- மூத்த சகோதரிக்கு அன்பான வணக்கங்கள். நலந்தானே? தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
      February 20 at 1:13pm ·
    • Arul Mozhi ஒவ்வொரு பதிவிலும் பதில் அளித்த பாங்கு சூப்பரொ சூப்பர்.
      February 20 at 5:18pm · · 1 person
    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Arul Mozhi :- Good evening sis.
      February 20 at 5:23pm ·


      விருப்பம் குறித்தவர்கள்:-

2 comments:

Anonymous said...

ஏங்க வைக்காதே!
ஊக்கமது அளிக்க
வாராயோ?

Vaalthukal.

Anonymous said...

ஏங்க வைக்காதே!
ஊக்கமது அளிக்க
வாராயோ?

Vaalthukal.