கண்களோ பூத்திருக்க.
கதவோசை கேட்டாலோ
நீயென ஓடிவர.
தொலைபேசி ஒலித்தாலோ
உனையே நினைத்திருக்க.
உன் வண்டியோசைக்கு
காதையே தீட்டியிருக்க.
எண்ணங்கள் சுழன்றடிக்க,
மனமோ தடுமாற,
உடலோ சோர்ந்திருக்க,
நிலைக் கொள்ளா
மங்கையவள்,
காத்திருந்தாள் உனக்காக.
உன் குரலைக் கேட்டாலோ
உள்ளமும் குதிக்கிறது.
முகமோ மலர்கிறது.
கண்களோ மிண்ணுகிறது.
உனைக் கண்டாலோ,
கண்ணகளோ படபடக்க,
விரல்களோ முறுக்கிக் கொள்ள
உடலோ பரபரக்கிறது.
உனைப் பிரிய முடியா
மங்கையவள்
நேரில் பார்த்திருக்க,
குரல் கேட்டு மகிழ்ந்திருக்க,
உறவாடி சிலிர்த்திருக்க,
விரைந்து வா - இது
மின்னஞ்சல் அல்ல,
மன அஞ்சலிது.
- ரசித்து வாசித்து கருத்திட்டவர்கள்:-
Dhavappudhalvan Badrinarayanan A M அவளுடைய அஞ்சல் சேருமா? மகிழ்ச்சி சகோதரி.February 20 at 1:47pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @ M Venkatesan MscMphil :- மாலை வணக்கம் நண்பரே.February 20 at 3:40pm · · 2 people
Dhavappudhalvan Badrinarayanan A M @ Arul Mozhi:- "என்னே காதல்"
ஏக்கக் காதல். வெளிகாட்டா உள்ளக்காதல்February 20 at 5:43pm · · 1 person
வீரபாண்டியன் Veera நல்ல கவிதை சார்,கணவனை பிரிந்து இருக்கும் மனைவிமார்களின் உள்ள குமுறலாக என் காதில் ஒலிக்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும்.February 20 at 9:51pm · · 2 people
Sathiabama Sandaran Satia உனைக் கண்டாலோ, கண்களோ படபடக்க, விரல்களோ முறுக்கிக் கொள்ள உடலோ பரபரக்கிறது.// கண்ட இடம் குளிர் பிரதேசமோ???February 21 at 7:28pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M @ Sathiabama Sandaran Satia:- " கண்ட இடம் குளிர் பிரதேசமோ??? "
எந்த இடமாய் இருந்தாலும் காண வேண்டும் என்ற ஏக்கத்தில் இருப்பவருக்கு எல்லாமே ஆகும்.February 22 at 7:57pm ·ரசித்து வாசித்தவர்கள்:-





No comments:
Post a Comment