Translate

Thursday, June 14, 2007

நண்பர்களே..........!!

நட்பு எனும் நாட்டத்திலே
மாற்றிக் கொண்டோம் இதயங்களை
பெற்றுக் கொள்ள விருப்பமின்றி
பிரிகின்றோம் இந்நாளில்.

மாற்றி வைத்த இதயங்கள்
துடிக்கின்ற துடிப்பெல்லாம்
கண் வழியே வழிகிறதே
துடைத்துக் கொள்ள தோன்றாமல்.

எத்தனையோ வழி முறைகள்
தொடர்புக் கொள்ள இருந்தாலும்
ஈடாக கண் வழியே
பேசும் மொழி.

No comments: