Translate

Friday, June 1, 2007

தொண்டனுக்கு--இல்லை இல்லை !!!!

தொண்டனுக்கு சிலையில்லை
தொண்டு மட்டும்- அவன்
வேலை என்பதாலா ?

தொண்டனுக்கு சிலையில்லை
சிலை வைக்க-அவனுக்கு
வசதி இல்லாததாலா ?

தொண்டனுக்கு சிலையில்லை
தொண்டனை,
தொண்டனே மதிக்காததாலா ?

தொண்டனுக்கு சிலையில்லை
தொண்டனவன் வாழ்வை
தொலைத்தவன் என்பதாலா ?

No comments: