Translate

Monday, January 5, 2009

உயிரென்ன மலிவா?

உறவொன்று கிடைத்ததால்
உதித்தது ஒன்று.

உறவற்று போனதால்
உதித்ததை வளர்த்தாய்.

உறுதியொன்றை எடுத்தாய்
உறுதியென நினைத்து.

உயர்த்தும்
உறுதியில், பள்ளியில் சேர்த்தாய்.

உயர்வளிக்குமிடத்திலே
உயிரும் பறந்ததோ.

உதித்திருந்த மலரும்
உதிரும் நிலையிலே,

உதித்தவன் உயிருடன்
உன்னுயிரும் துடிக்க,

உன்னுடைய சோகமோ
உயர்வாயிருக்க,

உணர்ச்சிகளுக்கிடையில்
உறுதியாய் எடுத்தாய்..

உள்ளத்தின் சோகமோ
பறந்தே அலைந்தது.

உன்னுடைய உள்ளமோ
விரிந்தே கிடந்தது.

உடல் தானம் செய்து,
ஊனத்தைப் போக்கி,

ஊனமுற்றோர் வாழ
உதவி புரிய,

ஈன்றதை பறிக்கொடுத்த நிலையிலே,
ஈடில்லா இழப்பிலே,

முடிவதை செய்தாய்
விரைந்தே எடுத்தாய்.


மகனென்ற உறவு
இல்லாமல் போகலாம்.

உன்னுடைய செயல்கள்
தோல்வியாய் தெரியலாம்.

உன்னுடைய நினைப்புக்கு
தோல்வியே இல்லை.

அஞ்சலி செலுத்த தெரியவில்லை.
ஆறுதல் சொல்லவும் முடியவில்லை.

தலை வணங்குகிறேன்
உனது முடிவுக்கும் உறுதிக்கும்.



பின் குறிப்பு; சேலம் அருகில் ஒரு பள்ளியில் மாணவன் தலையில் அடிப்பட்டு ''மூளைசாவினால்'' இறந்து விட்டான். அவனின் தாயோ, அவன் உடலிலிருந்து உயிர் பிரியுமுன்னே உடல்தானம் செய்ய முடிவெடுத்து, மிகவும் சிரமத்திற்கிடையில் சென்னைக்கு வந்தும், அந்த சிறுவனின் தந்தையின் ஒப்புதல் கிடைக்காததால், யாருக்கும் பயனின்றி மரணமடைந்து விட்டான். அந்த தாயின் இழப்பும், சட்டங்களின் பெயராலே ஏற்ப்பட்ட பயன்படவேண்டிய நோயளிகளுக்கான இழப்பும் எமக்கு ஏற்படுத்திய வேதனையை எம்மால் முடிந்த அளவு கவிதையிலே வடிக்க முயற்ச்சித்து இருக்கிறேன்.

No comments: