ஓயாமல் உலகை(யே)
சுற்றிவரும் காற்று தான்,
சுமந்து வந்தது தூதாய்
ஓசையின்றி உன் வாசத்தை.
கண்விழித்த நேரத்தில்
காற்று வரும் திசைநோக்கி,
கயல்விழியாள் மணம் நுகர
காத்திருந்தேன் முகம் காட்டி.
பாவையுனை நான் காண
பரவசத்தில் மனம் துடிக்க,
பசித்திருந்த ஏழையாய்
பருகிவிட துடித்திருந்தேன்.
மறைப்புகள் பெரிதாக – திரு
மணமென்னும் தடுப்பாக,
இணைதலை எதிர்நோக்கி
தகர்த்திட நான் பார்க்க,
குளிரிலும் வெம்மை ஊடுருவ,
குற்றாலமாய் உடலை நீராட்ட,
மறைப்பொருளாய் நினைவில் நீ சிரிக்க,
சுரந்தது சுரங்கள் ஊற்றாக.
No comments:
Post a Comment