தித்திக்கும் தீபாவளி.
திகட்டாத தீபாவளி.
செவியதிரும் பட்டாசுக்கள்
விழி விரியும் வண்ணங்கள்.
வேடிக்கை சாலங்கள்
வாரியிறைக்கும் புவியெங்கும்.
இனிப்பான பலகாரங்கள்
சுவையாக அத்தனையும்.
இனிதாக களிந்திடவே
கவனமோடு ஆளுங்கள்.
இல்லாத உறவையும்
மகிழ்வடைய செய்யுங்கள்.
சுவையான விருந்தோடு
வேண்டாத அழைப்பாக
உள்நிறைந்து அமர்ந்துக்கொள்ளும்
புகையோடு, அசீர்ணமும்.
நெல்லிக்காய் அளவினிலே
மருந்தையும் உள்ளிட்டு,
அளவோடு கொண்டாடி
மிகையாக வாழ்ந்திருக்க,
கொண்டாடும் உறவாடும் நட்புகள் மற்றும் அனைவருக்கும்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment