அவனை விட புதியவனிடம்
புதுமையாய் எதைக்
கண்டாய்.
கைக்குழந்தை அவனிடம்
தவள்ந்திருக்க,
கைக்கோர்க்க
சென்றுவிட்டாய் புதிதாக.
குற்றமவனதென உன்
சுற்றம் கைநீட்ட,
அவன் சுற்றம்
பார்வையாலே கிளறியதே.
அக்கம் பக்க
கேலிப்பேச்சு, நமட்டு சிரிப்பால்
விஷப்பூச்சிகளால்
கடிப்பட்ட நிலையாய்
அவன் துடித்ததை,
அவனியின்றி யாரிறிவார்.
நண்பர்குழாம் ஆதரவாய் சூழ்ந்திருந்து
துன்பங்களைப்
பகிர்ந்துக் கொள்ள,
தனியனாய் தவித்தாலும்
தாயுமானவனாய்
உறுதிக்கொன்டான்
தவமாய் வாழ்ந்திருந்து,
தலைவனாய், புதல்வனை
உயர்த்திவிட.
No comments:
Post a Comment