.
முடிச்சவிழ்க்க வினா தொடுக்க,
விளக்கம் கேட்டு அம்பு திரும்ப,
பொருளதை உரைத்தேன் புரிந்துக்கொள்ள.
விரைந்தது பூமராங், புயலாய்.
உங்களது மட்டும் சரியா?
முடிந்துபோனதே விடையின்றி.
நினைவு திவலைகளில்
எத்தனையோ செய்தி இருக்க,
மொழி உரைக்க வாயிருந்தும்
தொண்டைக்குழி தூக்கிலாட,
மனம் தலை குனிந்து நிற்கிறது
புத்தி முட்டாளென பெயர் வாங்கி.
No comments:
Post a Comment