எழுதுகின்ற கோளை
எடுத்துத்தான்
வைத்திருப்பேன்.
கிடைக்கின்ற தாட்களில்
கிறுக்கித்தான்
வைத்திருப்பேன்.
வாய்கின்ற நேரங்களில்
வாசித்துக்
கொண்டிருப்பேன்.
மாற்றாரின் பதிப்புகளை
காணுகின்ற போதெல்லாம்,
மாற்றங்களைக் கொண்டுவர
கனவுகளை காணுகின்றேன்.
பதிக்கின்ற நேரங்களில்
பதறித்தான்
போகின்றேன்.
மணலில் ஊற்றிய நீர்
போல
காணுகின்ற கனவுகளும்
காற்றில் பறக்கும்
சரகுகளாய்
மறைந்துவிடும் நிழல்
போல.
No comments:
Post a Comment