கோவையில் துரைராஜ் என்பவர் 9ம் வகுப்பு வரை
படித்து விட்டு, ஒர்க் ஷாப்பில் 15 வருடம் வேலை செய்த அனுபவத்தினால், தனியாக ஒர்க்
ஷாப் ஆரம்பித்து நட்டம் அடைந்தவர். ஒர்க் ஷாப் அருகில் மின்சார அலுவலகத்தில்
(இ.பி. ஆபிஸில்) மின்கட்டணம் செலுத்த, மக்கள் வரிசையாக வெகுநேரம் காத்திருந்து
சிரமபடுவதை பார்த்து, அவர்களுக்கு பதிலாக, மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களிடம்
மின்கட்டணம் வசூலித்து, அவர்களுக்கு பதிலாக மின்சார அலுவலகத்தில் நாம் கட்டி,
அதற்காக சிறு கட்டணமும் வசூலித்தால் அவர்களுக்கு சிரமமும், நேரமும் குறைந்து
நமக்கு வருமானமும் கிடைக்குமென எண்ணி, தெரிந்தவர்களிடம் அட்டைகளையும் பணமும்
பெற்று மின்சார அலுவலகத்திற்கு சென்று, நம்பிக்கையான முறையில் செயல்பட்டதினால்,
வாடிக்கையாளர்கள் பெருகினார்கள்.
அதேசமயத்தில் கணினி ஆன்லைன் மூலமாக
மின்கட்டணம் செலுத்தக் கூடிய வாய்ப்பு
இருப்பதை அறிந்து, கணினி ஆன்லைன் மூலமாக எப்படி மின்கட்டணம் செலுத்துவது என்பதை
ஒருவரிடம் அறிந்துக்கொண்டு, இதுவரை பயன்படுத்தி வந்த டிவிஎஸ் 50யுடன் ஒரு லேப்டாப் மற்றும் மின்கட்டணம் செலுத்தியதற்கான
பில் (ரசிது) தருவதற்காக பிரிண்டரும் வாங்கிக்கொண்டதுடன், வங்கியில் கணக்கு
துவக்கி, சிறிது பணம் போட்டுக் கொண்டேன்.
தற்போது 36௦௦ வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மின்கட்டணத்தைக் குறிக்க மின்சாரவாரியத்திலிருந்து ஒரு குறிபிட்ட நாள் வருவதைப்போல, ஒவ்வொரு
வீதிக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று, மின்கட்டணம் வசூலித்துக் கொண்டு, கணினி
இண்டர்நெட் மூலம் பிரிண்டரில் உடனே பில் கொடுத்துவிடுவதால், ஆன்லைன் மூலமாக
மின்வாரியத்துக்கு பணம் சென்று சேர்ந்து விடுகிறது. வசூலித்த பணத்தை அவ்வப்போது வங்கியில்
செலுத்தி விட்டால் போதும்.
அதேபோல் வாடிக்கையாளருக்கு ஏற்றபடி அன்றைய நாள்
முன்கூட்டியே நம் வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டியது முக்கியம். வண்டியின்
பெட்ரோல் செலவுக்கும், இண்டர்நெட் மற்றும் பிரிண்டர் செலவுக்காகவும் ஒரு
பில்லுக்கு 10 ரூபாய் வசூலிக்கிறேன். மிகவும் சிரமப்படுபவர்கள் தெரிந்தால் அவர்களிடம்
அதுவும் வாங்குவது இல்லை.
ஏரியாவுல இபி காரர்களுக்கு கடைசி நேரத்தில் வரிசை
கட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து விடுதலை. மின்கட்டணம் செலுத்த வேலைகளை விட்டுவிட்டு மழை, வெயில் என்று பாராமல்
செல்ல வேண்டிய சிரமம் குறைவதால் வாடிக்கையாளருக்கும், 9வது மட்டும் படித்த எனக்கு
இந்த வருமானத்தினாலும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
#நீங்களும் முயற்சித்து, வருமானத்தை பெருக்கி
வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment